அது பிடிஆர் வாய்ஸ் தானா… டெல்லியில் அமித் ஷா உடன் சந்திப்பு எதற்காக? எடப்பாடி சொன்ன சீக்ரெட்!

மதுரை மற்றும் விருதுநகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அதிமுக பொதுச் செயலாளர்

இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது. 8 மணி நேர வேலை இருந்தால் தான் தொழிலாளர்களால் சரியான வாழ்க்கையை நடத்த முடியும். அதுவும் திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

திமுக-வில் 8 அமைச்சர்கள் அதிமுக-வில் இருந்து சென்றவர்கள் தான் – எடப்பாடி பழனிசாமி

பிடிஆர் ஆடியோ

இதன்மூலம் இந்த விஷயத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார். பிடிஆர் பேசியது பற்றிய கேள்விக்கு, அவரே பேசிவிட்டு அவரே இல்லை என்கிறார். இதை ஆய்வு செய்ய வேண்டும். 30 ஆயிரம் கோடி ரூபாய் என்பது சாதாரண விஷயம் அல்ல. இதுகுறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அவர் அறிக்கை வெளியிட்ட பிறகு தான், இதில் ஏதோ விஷயமுள்ளது என நினைத்தோம். இது அவரது குரல் தான். 30 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே வைப்பது? என்ன செய்வது? என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை எங்கே?

இந்த விஷயத்தை ஆளுநரிடம் கொண்டு செல்வோம். ஏனெனில் நிதியமைச்சரே பேசியுள்ளார். இதை நினைத்து பார்த்தாலே அதிர்ச்சி அளிக்கிறது. இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு கொள்ளை அடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் என்ன செய்வர்? அப்படி நடந்தால் யாருமே வாழ முடியாது. அவர்கள் மட்டும் தான் வாழ முடியும். மற்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறாரே? ஏன் இந்த விஷயத்தில் ஒரு உத்தரவு போட வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்பினார்.

முப்பெரும் விழா

அதிமுக கட்சி கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு, நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தெளிவான தீர்ப்பை அளித்து விட்டது. இதுகுறித்து ஊடகங்களில் செய்திகளும் வெளியாகிவிட்டன. நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் அதிமுகவின் கொடியை பயன்படுத்துவதை எப்படி ஒளிபரப்புகிறீர்கள்? தயவு கூர்ந்து இதுபோன்ற செய்திகளை ஒளிபரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

கொடநாடு வழக்கு விசாரணை

கொடநாடு வழக்கை பொறுத்தவரை விசாரணை, கைது, நீதிமன்ற விசாரணை உள்ளிட்டவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? முதலில் ஐஜி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார்கள். அதில் 90 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில் சிபிசிஐடியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

அமித் ஷா உடன் சந்திப்பு

இப்படி மாற்றிக் கொண்டே செல்கின்றனர். மீண்டும் அதிமுக ஆட்சி வரும் போது உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவர். அமித் ஷா உடன் டெல்லி சந்திப்பு என்பது சம்பிரதாயமான ஒன்று. அவ்வளவு தான் எனக் கூறினார். அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் குறித்து அண்ணாமலை அறிவிப்பு தொடர்பான கேள்விக்கு, மேல பாஸ் இருக்கும் போது கீழ இருப்பவர்களை பற்றி எதற்கு பேச்சு. அவரைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.