+2 முடித்திருந்தாலே போதும்.. மத்திய அரசில் 1,600 காலிப்பணியிடங்கள் காத்துக்கிட்டிருக்கு..!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான Combined Higher Secondary Level (CHSL) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி பெயர் : லோவர் டிவிஷன் கிளார்க், ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்ஸ்

காலி பணியிடங்கள் : 1600

கல்வி தகுதி :அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

வயது வரம்பு:01-08-2023 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 02-08-1996 க்கு முன் மற்றும் 01-08-2005 க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சம்பளம்: Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900 – 63,200

Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500 – 81,100

Data Entry Operator – ரூ.25,500 – 81,100

தேர்வு செயல்முறை :கணினிவழி தேர்வு, விரிவான தேர்வு (Descriptive Paper) மற்றும் திறனறி தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக SSC CHSL தேர்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ இணைய முகவரி மூலம் 09.05.2023 முதல் 08.06.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.06.2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.