+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!! 87.33% மாணவர்கள் தேர்ச்சி..!

பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 87.33 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற மாணவர்கள் பற்றிய விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடவில்லை….

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.