காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட டிரெய்லர் வெளியீடு..!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்துக்கான டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ராமநாதபுரம் மாவட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் மற்றும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியானது. அதையடுத்து படத்தின் சிங்கிளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. அதிரடியான கதைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், ஆர்யாவுக்கு கிராமங்களிலும் ரசிகர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் வரும் ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.