விரைவில் உருவாகும் பிச்சைக்காரன் 3..?

விஜய் ஆண்டனி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தொடர்ந்து, அதனுடைய மூன்றாவது பாகம் விரைவில் தயாரகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ் நடிப்பில் வெளியான இந்த மாபெரும் வெற்றியை படைத்தது. அதேபோன்று சில மாதங்கள் கழித்து அதே படம் தெலுங்கில் பிச்சகாடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

தமிழை விடவும் தெலுங்கில் இந்த படத்துக்கு அதிரி புதிரி ஹிட் கிடைத்தது. இதையடுத்து பிச்சைக்காரன் 2 படத்தை 6 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்தது மட்டுமில்லாமல், அவராகவே இசையமைத்து இயக்கியுள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், இதுவரை ரூ. 22 கோடி வசூல் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தெலுங்கில் பிச்சகாடு 2 என்கிற பெயரில் வெளியான இந்த படம், அங்கு மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, விரைவில் பிச்சைக்காரன் 3 படம் உருவாகவுள்ளது. ஆனால் அது பிச்சைக்காரன் 1 மற்றும் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. அது முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாக்கப்படுகிறது. வரும் 2025-ம் ஆண்டு பிச்சைக்காரன் 3 படம் வெளியாகும் என அந்த பேட்டியில் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.