வடக்கு தொடருந்து சேவை ஜூலை 15 முதல் மீண்டும் ஆரம்பம்!


எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க
முடியும் என்று தொடருந்து  திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில்
தொடருந்து  சேவையை ஆரம்பிக்க முடியும் என்று மஹவ – ஓமந்தை தொடருந்து  வீதி
செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார்.

இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள்

அநுராதபுரம் முதல் வவுனியா வரையான தொடருந்து  மார்க்கத்தின் திருத்தப் பணிகள்
தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.

குறித்த மார்க்கத்தின் திருத்தப் பணிகள் இரண்டு கட்டங்களாக
முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு தொடருந்து சேவை ஜூலை 15 முதல் மீண்டும் ஆரம்பம்! | Northern Train Service Resumes From July 15

இந்தநிலையில், அந்த மார்க்கத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ளதுடன்,
இரண்டாம் கட்டம் காலநிலையைக் கருத்தில்கொண்டு இடைநிறுத்தப்படவுள்ளது என்று
தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அடுத்த வருடம் முற்பகுதியில் குறித்த வீதியின் இரண்டாம் கட்டத்
திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்று மஹவ –
ஓமந்தை தொடருந்து  வீதி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க மேலும்
குறிப்பிட்டார்.

வடக்கு தொடருந்து  மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு தொடருந்து  சேவை கொழும்பு – கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.