கொழும்பில் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து (Live)

கொழும்பு -தொட்லாங்க கஜீமா குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தினால் ஏராளமான வீடுகள் பாதிப்படைந்துள்ளன.  தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  பொதுமக்கள்  தீ விபத்து காரணமாக குறித்த குடியிருப்பு பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  அத்துடன் காற்று காரணமான தீ வேகமாக அங்குள்ள ஏனைய குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  இந்நிலையில், இளைஞர்கள், பொதுமக்கள் … Read more

அதிகரிக்கும் அழுத்தம் – வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெற தயாராகும் அரசாங்கம்

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராக உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவது அல்லது மீள்திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதன்படி, பல பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாற்றுத் திட்டம் அறிமுகம் உயர்பாதுகாப்பு வலயங்களால் வர்த்தகம் பாதிக்கப்படலாம் … Read more

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற பெருந்தொகை கடன்: விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாமரை கோபுரம், ஒரு இருண்ட படம் மட்டுமே மேலும் தெரிவிக்கையில்,“கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேறு இடத்தில் … Read more

ரஷ்யப் படைகளின் அட்டூழியம் – இலங்கை தமிழர்களின் திகில் அனுபவம்

உக்ரைன் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்களும் ரஷ்யப் படைகளின் காவலில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு இலங்கையர்களில் திலுஜன் பத்தினஜகனும் ஒருவர். இந்நிலையில், திலுஜன் பத்தினஜகன் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் உயிருடன் வெளியே வரமாட்டோம் என்று நினைத்தோம்” என குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்த போது தான் வசித்து வந்த வடகிழக்கு உக்ரைனில் உள்ள குப்ன்ஸ்கில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள கிர்கிவ் … Read more

சற்றுமுன் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு! இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை (Live)

நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 வரை “தேசியப் பேரவையை” ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது. பார்வையாளர் கூடம் திறப்பு இதேவேளை நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோவிட் தொற்று நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் … Read more

கடும் நிதி நெருக்கடி – முடங்கும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள்

நிதி நெருக்கடி காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதிலும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான எழுதுபொருட்களை பெற்றுக்கொள்வது, அத்தியாவசிய ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இருபதாயிரம் கோடிக்கு மேல்  நிலுவைத் தொகை அமைச்சுக்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது மட்டுமன்றி ஆரம்பிக்கப்பட்ட … Read more

தமிழர்களுக்காக பேசிய ஒரே நாடு இந்தியா!

இலங்கை சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்பாக ஜெனிவாவில் முதன் முதலாக 13 ஆவது திருத்தச்சட்ட தீர்வு திட்டத்தை முன்வைத்த நாடு இந்தியா எனவே இதனை அனைத்து தமிழ் தலைமைகளும் ஏற்றுக்கொண்டு செயற்படுமாறு கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.   மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச்சட்டம் அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிறுபான்மை … Read more

ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்

உக்ரேனின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட 7 இலங்கை மாணவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த குறித்த மாணவர்கள், கடந்த ஜனவரி மாதம் உக்ரைனுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ரஷ்யாவிடம் சிக்கிய இலங்கையர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்யப் படைகளின் பிடியில் சிக்கியுள்ள இந்த மாணவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் முறைப்பாடு செய்யவில்லை என ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய படைகளால் … Read more

ஜனாதிபதி அலுவலகத்தினால் அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட விசேட சுற்றறிக்கை

எந்தவொரு குடிமக்களும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினியாக இருக்கக்கூடாது என்றும், குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்றும் ஜனாதிபதி அலுவலகம் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுற்றறிக்கை உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஊட்டச் சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அமைச்சுகள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாகவும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் … Read more

மகாராணியின் இறுதிச் சடங்கு – வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி ரணில்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணைவதற்கான அரிய வாய்ப்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைக்கவுள்ளது. எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட தம்பதிகளின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார். நெதர்லாந்தின் முன்னாள் ராணி இளவரசி பீட்ரிக்ஸ், இதேபோன்ற வரலாற்றைக் கொண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான … Read more