தொழில்முனைவோராக வாய்ப்பு; சென்னையில் சிறுதானிய ஐஸ்க்ரீம், பால் நூடுல்ஸ், ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி!

விளைச்சல் அதிகம் இருந்தாலும், சந்தையில் விற்கும்போது நல்ல விலை கிடைத்தால்தான், விவசாயிக்கு லாபம் கிடைக்கும். விவசாயப் பொருள்களை நேரடியாகக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்பதை விட மதிப்புக் கூட்டிச் சந்தையில் விற்றால் அதிக லாபம் பெறலாம்.

‘ஒவ்வொரு விவசாயப் பொருளுக்கும் எப்படி மதிப்புக் கூட்டினால் நல்ல விலை கிடைக்கும்?’ என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

சிறுதானிய ஐஸ்க்ரீம் பயிற்சி

நேரடியாக விற்பனையாகும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டப் பொருள்களை அழுகல் மற்றும் பூச்சித் தாக்குதல் போன்ற காரணங்களால் அதிக நாள்கள் வைத்து விற்பனை செய்ய முடியாது. நீண்ட நாள்கள் வைத்திருந்தால் அதிக விலைக்குப் போகும் எனத் தெரிந்தும் வைத்திருக்க முடியாமல் விவசாயிகள் விற்பனை செய்து விடுகிறார்கள். மதிப்புக் கூட்டிய பொருள்களாக மாற்றி  விற்பனை செய்யும்போது அதிக நாள்கள் தாக்குப்பிடிப்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது.

விவசாயிகள் மட்டும் அல்ல, தொழில்முனைவோரும் மதிப்புக் கூட்டிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி தொழில் செய்து, லாபம் பார்க்கலாம். அதற்கு இந்த மதிப்புக் கூட்டல் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டால் வெற்றிகரமான தொழில் முனைவோராக முடியும்.

பசுமை விகடன் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், உணவு, பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து  “சிறுதானிய ஐஸ்க்ரீம், பால் நூடுல்ஸ், ஊறுகாய் தயாரிப்பு… லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல்” என்ற பயிற்சி வகுப்பை ஜுன் 23ம் தேதி நடத்துகிறது.

மதிப்புக் கூட்டல் பயிற்சி

நேரடியாக நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில்,

  • குறைந்த முதலீட்டில் சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்.

  •  பாலை மதிப்புக்கூட்டி தயாரிக்கும் நெய், பனீர், பால் நூடுல்ஸ்.

  • மாங்காய், தக்காளி, பூண்டு, எலுமிச்சையை மதிப்புக்கூட்டி ஊறுகாய் தயாரிக்கும் நுட்பங்கள்.

  • வங்கிக் கடன் பெற திட்ட அறிக்கை.

  • உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள பிஸினஸ் இன்குபேஷனில் உறுப்பினர் ஆவதற்கான வழிகாட்டல்கள்.

இன்னும்… இன்னும் நிறைய நுட்பங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மதிப்புக் கூட்டல் பயிற்சி

பயிற்சியில் கலந்து கொள்ள…

பயிற்சி நடைபெறும் நாள்: 23-6-2023 வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, அலமாதி/ கொடுவேளி ( சென்னையில் இருந்து 27 கி.மீ ). திருவள்ளூர் மாவட்டம்.

பயிற்சியில் நோட்பேட், பேனா, சான்றிதழ், தேநீர், மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிக் கட்டணம்: ரூபாய் 650/-

கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும். கூகுள் பே, அமேசான் பே, போன் பே. பே.டி.எம். போன்ற UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்த க்யூ.ஆர் கோடை (Vikatan Media) ஸ்கேன் செய்யவும்.

இந்தக் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும் அல்லது UPI Id: vikatanmedia17590@icici யிலும் கட்டணம் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு, செல்போன்: 99400 22128

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.