உதயநிதி ஸ்டாலின் ரிட்டர்ன்ஸ்… ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை… உண்மை இதுதான்!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

நேற்று இரவு சென்னை திரும்பினார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்ய முதலமைச்சர்

அவர்கள் என்னையும், அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகளையும் உடனே செல்லச் சொன்னார்கள்.

ரயில் விபத்து என்ன நடந்தது?
ஒடிசா ரயில் விபத்து

நாங்கள் நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு தான் பாதிக்கப்பட்ட பயணிகள் அனுமதிப்பட்டிருப்பதாக கூறினர். அங்கு சென்று ஆய்வு செய்ததில் தமிழர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிந்து கொண்டோம். அதன் பிறகு உடல்கள் ஏதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என்று mortunary-க்கு அழைத்துச் சென்றார்கள்.

ஸ்டாலின் உடன் Zoom Call

அங்கேயும் நாங்கள் சென்று விசாரித்தோம். அங்கும் தமிழர்கள் யாரும் இல்லை. அதன் பிறகு அங்கிருக்கக்கூடிய அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். பின்னர் நம் முதலமைச்சர் அவர்களுடன் Zoom call-ல் பேசி கள நிலவரத்தை எடுத்துரைத்தோம். கோரமண்டல் விரைவு ரயிலில் முன்பதிவு செய்த 127 பயணிகளில் 28 பேர் தமிழர்கள்.

ஒடிசா அரசின் உதவி மையம்

இவர்கள் யாரும் ரயில் விபத்தில் பாதிக்கப்படவில்லை. ஒடிசா அரசின் உதவி மையத்தில் தமிழர் காணவில்லை என்பது போன்ற எந்தவிதமான ஒரு அழைப்பும் வரவில்லை. இந்த 28 பேரில் 21 பேரிடம் பேசிவிட்டோம். 7 பேரை மட்டும் trace செய்ய முடியாமல் இருந்தது. எனவே எஞ்சியவர்களிடமும் பேசிவிட்டால் தமிழ்நாட்டிலிருந்து யாருமே பாதிக்கப்படவில்லை என்ற ஒரு முடிவிற்கு வரலாம்.

விபத்து நடக்க காரணம் யார்?

எதனால் இந்த விபத்து நடந்தது என்பதைக் கண்டுபிடித்து மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடனான சந்திப்பில், இறந்தவர்களுடைய உடலை புகைப்படம் எடுத்து உடனே கொடுங்கள். அதை நாங்கள் எங்களுடைய அரசுக்கு அனுப்பி எங்களால் trace செய்ய முடியுமா, தமிழ்நாட்டு மக்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று கேட்டோம்.

இன்னும் 6 பேர்

அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். விமானம் மூலம் சென்னை திரும்பிய 6 பேர் பற்றி கேட்டதற்கு, ஒடிசா அரசு தான் அவர்களை அங்கிருந்து பேருந்தின் மூலமாக புவனேஸ்வருக்கு கொண்டு விட்டார்கள். நாங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவனைக்கு செல்வதற்கு 1 மணி ஆகிவிட்டது.

அவர்கள் நேற்று அதிகாலையிலே கிளம்பி விமானத்தின் மூலமாக பாதுகாப்பாக வந்துவிட்டார்கள். நாங்கள் அவர்களை trace செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கள நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.