43 உடலை அடையாளம் கண்ட ஏஐ தொழில்நுட்பம்! ஒடிசா ரயில் விபத்தில் நடந்தது என்ன? அசத்திய அஸ்வினி வைஷ்ணவ்

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் 288 பேர் பலியான நிலையில் 83 பேரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் சமீபத்தில் அறிமுகம் செய்த செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மூலம் தற்போது 45 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவில் கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே திடீரென சரக்கு ரயில் மீது தடம்புரண்டது. கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.

இந்தவேளையில் அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 288 பேர் பலியாகினர். மேலும் காயம், படுகாயம் என 700க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் அடையாளம் காண முடியாதபடி ஏராளமானவர்களின் உடல்கள் மருத்துவமனைகளில் குவிந்து கிடந்தன. 288 பேர் இறந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி 83 பேரின் உடல்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் அவர்கள் யார் என்பதை அறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் மாற்று வழியில் யோசித்தனர். ஆதார் கார்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களை அடையாளம் காண திட்டமிட்டனர்.

இதையடுத்து உடனடியாக ஆதார் கார்டு அதிகாரிகள் வந்து இறந்தவர்களின் கைவிரல்களின் ரேகைகளை பதிவு செய்ய முயன்றனர். அப்போது பலபேரின் கை விரல்களில் காயங்கள் இருந்தன. இதனால் ரேகை என்பது சரியாக பதிவாகாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆதார் அட்டை தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் முயற்சி கைக்கூடவில்லை.

Railway Officials used artificial intelligence ‛Sanchar Saathi’ Portal to find unidentified bodies in Odisha train accident,

இதன் தொடர்ச்சியாக தான் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதாவது இந்தியாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு திறனோடு இயங்கும் வகையில் ‛சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) எனும் இணையதளம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. ரயில்வே துறையை நிர்வகித்து வரும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தான் தகவல் தொழில்நுட்பத்துறையையும் கவனித்து வருகிறார். மேலும் அவர் தான் ‛சஞ்சார் சாதி’ எனும் செயற்கை நுண்ணறிவு இணையதளத்தையும் அறிமுகம் செய்தார்.

இந்த இணையதளத்தில் ஒவ்வொருவம் தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்து கொண்டால் போதும். அதன்பிறகு செல்போன் தொலைந்தாலோ அல்லது திருடு போனாலோ, அந்த செல்போன் எங்கு உள்ளது என்பதை இந்த இணையதளம் மூலம் மக்கள் அறிய முடியும். இந்த செயற்கை நுண்ணறிவு இணையதளம் மூலம் தான் ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது.

Railway Officials used artificial intelligence ‛Sanchar Saathi’ Portal to find unidentified bodies in Odisha train accident,

அதாவது இந்த இணையதளம் மூலம் 64 பேரின் உடல்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 45 பேரின் உடல்கள் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் அனைவரும் அந்த இணையதளத்தில் தங்களின் செல்போன் எண்களை பதிவு செய்திருந்த நிலையில் அவர்களின் போட்டோ, ஆதார் விபரங்களின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அதாவது Facial Recognition எனப்படும் முகத்தை அடையாளம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அவர்கள் தொடர்புடைய செல்போன் ண்களுடன் தொடர்புடைய சுயவிவரங்களுடன் பொருந்திபோவதை வைத்து உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய முயற்சி நன்றாக கைக்கொடுத்தது.

அதன்பிறகு இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்பத்தினரின் செல்போன் எண்களை அறிந்து அவர்களுக்கு தகவல் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் கூட இன்னும் சுமார் 40க்கும் அதிகமானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டி உள்ளது. இதற்கான பணிகளையும் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல்கள் அழுகிவிடாமல் இருப்பதற்காக எம்பாமிங் செய்யப்பட்டுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.