Kawasaki Ninja ZX-6R – 2024 கவாஸாகி நிஞ்ஜா ZX-6R பைக் அறிமுகம்

முந்தைய மாடலை விட மிக நேர்த்தியாக சூப்பர் ஸ்போர்ட்டிவ் 2024 கவாஸாகி நிஞ்ஜா ZX-6R பைக்கினை மேம்படுத்தி சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்வது குறித்து எந்த தகவலும் இல்லை.

யூரோ 5 மாசு விதிமுறைகளுக்கு ஏறப் மேம்பட்ட 663cc என்ஜின் பெற்றுள்ள ZX-6R மாடலின் பவர் அதிகபட்சமாக 126.2bhp ஆகும்.

2024 Kawasaki Ninja ZX-6R

புதிய கவாஸாகி நிஞ்ஜா ZX-6R பைக்கில் புதுப்பிக்கப்பட்ட இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு, புதிய 4.3-இன்ச் வண்ண TFT டிஸ்பிளே உடன் கூடியதாக உள்ளது. முந்தைய மாடலில் இருந்த டிஜி-அனலாக் யூனிட்டை மாற்றியுள்ளது. இந்த TFT டேஷில் புளூடூத் இணைப்பு மூலம் ரைடர்ஸ் பல்வேறு அறிவிப்பு விழிப்பூட்டல் மற்றும் நேவிகேஷன் பெற அனுமதிக்கிறது.

2024 Kawasaki Ninja ZX-6R cluster

மிடில்வெயிட் சூப்பர்ஸ்போர்ட்டின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் நான்கு ரைடிங் முறைகளைக் கொண்டுள்ளது: ஸ்போர்ட், ரோடு, ரெயின் மற்றும் ரைடர் (இவை அனைத்தும் தனிப்பயனாக்கக்கூடியவை). மேலும், இரண்டு சக்தி முறைகளாக Full மற்றும் Low உள்ளது. டிராக்‌ஷன் கன்ட்ரோலில் மூன்று நிலைகள் உள்ளன.

டயர் அளவுகள் முறையே 120/70-ZR17 மற்றும் 180/55-ZR17 முன் மற்றும் பின்புறம், முந்தைய மாடலைப் போலவே இருக்கும்.

கவாஸாகி நிஞ்ஜா ZX-6R பைக்கில் உள்ள அலுமினிய பெரிமீட்டர் ஃபிரேம் வழங்கப்பட்டு USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆனத ஷோவா யூனிட்களாகவும் இரண்டும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை ஆகும்.

பிரேக்கிங் அமைப்பில் நிஸ்சின் மோனோபிளாக் காலிப்பர் முன்பக்கத்தில் உள்ள இரட்டை 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ஒரு 220 மிமீ டிஸ்கில்  ஒற்றை பாட் காலிபர் உள்ளது.

2024 Kawasaki Ninja ZX-6R dual led headlight

636cc,  லிக்யூடு கூல்டு இன்லைன்-ஃபோர் ஸ்க்ரீமர் என்ஜின் பவர் 128hp ஆனது 13,000rpm மற்றும் டார்க் 69Nm ஆனது 10,800rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கவாஸாகி நிஞ்ஜா ZX-6R விலை £10,599 (ரூ.11 லட்சம்) ஆகும். இசட்எக்ஸ்-6ஆர் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்படுமா? தற்போது, ​​இந்த விவகாரம் குறித்து இந்நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை.

2024 Kawasaki Ninja ZX-6R bike

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.