Honda Repsol Edition – ஹோண்டா ஹார்னெட் மற்றும் டியோ 125 ரெப்சால் எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 2023 ரெப்சால் எடிசனை அடிப்படையாகக் கொண்டு ஹார்னெட் 2.0 மற்றும் டியோ 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இரண்டு மாடல்களும் ஹோண்டா ரேஸிங் டீம் பாடி கிராபிக்ஸ் டிசைன் கொண்டுள்ளது. மற்றபடி, வேறு ஏவ்விதமான மாற்றங்களையும் பெறவில்லை. 2023 Honda Repsol Edition புதிய ரெப்சால் கிராபிக்ஸ் ஹோண்டா பிராண்டின் ரேஸிங்  பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என ஹோண்டா கூறுகிறது. இரண்டு மாடல்களும் ராஸ் ஒயிட் மற்றும் வைப்ரண்ட் ஆரஞ்சு … Read more

RE Himalayan – ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 என்ஜின் விபரம் வெளியானது

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் என்ஜின் விபரம் ஆர்டிஓ பதிவு தகவல் மூலம் கசிந்துள்ளது. Royal Enfield Himalayan 452 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக்கில் 40 hp பவரை வெளிப்படுத்தும் புதிய 451.65சிசி லிக்யூடு கூல்டு என்ஜின்  பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40-45Nm வரை டார்க் வெளிப்படுத்தலாம்.இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் கொண்டிருக்கலாம். … Read more

Tata Nexon mileage – டாடா நெக்ஸான் எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது

டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய நெக்ஸான் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் மைலேஜ் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. நெக்ஸான் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டு விதமாக கிடைக்கின்றது. Tata Nexon Fuel Efficiency நெக்ஸான் எஸ்யூவி காரில் அதிகபட்சமாக 120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு … Read more

Seltos SUV – 2 மாதங்களில் 50,000 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ்

இந்தியாவின் பிரபலமான சி-பிரிவு எஸ்யூவிகளில் ஒன்றான கியா செல்டோஸ் முன்பதிவு துவங்கப்பட்ட இரண்டு மாதங்களில் 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலை 14,2023 முதல் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. குறிப்பாக பெறப்பட்ட முன்பதிவுகளில் 77 சதவீத முன்பதிவு டாப் செல்டோஸ் HTX வேரியண்ட் பெற்றுள்ளது. ADAS பெற்ற மாடல் 47 சதவீதமும், டீசல் என்ஜின் கொண்ட வேரியண்டுகள் மொத்த முன்பதிவில் 40 சதவீதமாக உள்ளது. Kia Seltos மேலும், கியா இந்தியா நடப்பு மாதம் செல்டோஸ் … Read more

2024 Volkswagen Tiguan – இந்தியா வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி வெளியானது

சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி கார் பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாக வந்துள்ள நிலையில், இந்திய சந்தைக்கு 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரக்கூடும். ஃபோக்ஸ்வேகனின் அதிகம் விற்பனை ஆகின்ற எஸ்யூவி மாடலாக டிகுவான் விளங்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் பிளக் இன் ஹைபிரிட் என மூன்று விதமான ஆப்ஷனை பெறுகின்றது. 2024 Volkswagen Tiguan ஃபோக்ஸ்வேகன் அதிகாரப்பூர்வமாக விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை, புதிய டிகுவான் எஸ்யூவி பல்வேறு மாறுபட்ட என்ஜின் விருப்பங்களில் வழங்கப்பட … Read more

Ducati Scrambler 2G – ₹ 10.39 லட்சத்தில் டூகாட்டி ஸ்கிராம்பளர் 2ஜி விற்பனைக்கு வந்தது

டூகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஸ்கிராம்பளர் 2G பைக்கில் ஐகான், ஃபுல் திராட்டிள் மற்றும் நைட்ஷிஃப்ட் என மூன்று விதமாக இந்தியாவில் ரூ.10.39 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கிடைக்க உள்ளது. முந்தைய மாடலை விட சில குறிப்பிடதக்க மேம்பாடுகளை பெற்ற மாடலை விட மாறுபட்ட புதிய ஃபிரேம், ஸ்விங்கார்ம் மற்றும் என்ஜினின் எடையைக் குறைந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை ஒட்டுமொத்தமாக 4 கிலோ கிராம் எடை குறைந்துள்ளது. Ducati Scrambler 2G புதிய தலைமுறை டூகாட்டி … Read more

₹ 69.72 லட்சத்தில் Audi Q5 லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

முழுமையாக கருப்பு நிறத்தை பெற்ற ஆடி Q5 எஸ்யூவி மாடலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் லிமிடெட் எடிசன் விற்பனைக்கு ரூ.69.72 லட்சம் விலையில் வெளியாகியுள்ளது. Q5 எஸ்யூவி காரில் 261bhp பவர் மற்றும் 370Nm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 6.1 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும். Q5 ஆனது அடாப்டிவ் சஸ்பென்ஷனையும் பெறுகிறது டிரான்ஸ்மிஷன் அமைப்பில் ஏழு-வேக DCT கொண்டுள்ளது. Audi Q5 Limited Edition க்யூ5 எஸ்யூவி காரின் லிமிடெட் … Read more

Citroen C3 Aircross Variants – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி வேரியண்ட் வாரியான வசதிகள்

சிட்ரோன் நிறுவனத்தின் C எஸ்யூவி பிரிவில் வரவிருக்கும் புதிய C3 ஏர்கிராஸ் காரில் ஒற்றை மேக்ஸ் வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு 5 மற்றும் 5+2 என இரு விதமான ஆப்ஷனில் மொத்தமாக 10 விதமான நிறங்கள் மற்றும் இரண்டு விதமான இன்டிரியர் நிறங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சி3 ஏர்கிராஸ் ஆனது முன்பதிவு செப்டம்பரில் துவங்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் டெலிவரி வழங்கப்படும் என … Read more

KTM 390 Duke on-road price – 2024 கேடிஎம் 390 டியூக் பைக்கின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2024 கேடிஎம் 390 டியூக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் முக்கிய சிறப்புகள், தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். முந்தைய மாடலை விட மேம்பட்ட வசதிகள் கொண்டதாகவும், நவீனத்துவமான டிசைன் அம்சங்களை பெற்று என்ஜின் சிசி உயர்த்தப்பட்டு பவர் அதிகரிக்கப்பட்டுள்ளது. 13,000 வரை விலை உயர்ந்துள்ளது. 2024 KTM 390 Duke 390 டியூக் பைக்கில் அதிகபட்சமாக 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc … Read more

Kawasaki electric bikes – கவாஸாகி நின்ஜா e-1 மற்றும் Z e-1 எலக்ட்ரிக் பைக்கின் விபரம்

கவாஸாகி நிறுவனம் முதல் எலக்ட்ரிக் பைக் மாடல்களான நின்ஜா e-1 மற்றும் Z e-1 என இரண்டையும் 125சிசி பைக்குகளுக்கு இணையாக தயாரித்து, முதன்முறையாக இங்கிலாந்தில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. தோற்ற அமைப்பில் இரண்டு எலக்ட்ரிக் பைக் மாடல்களும் சிறிய அளவிலான வித்தியாசத்தை கொண்டதாக அமைந்துள்ளது. ஆனால் ஸ்போர்ட்டிவ் வடிவத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. Kawasaki Ninja e-1 & Z e-1 நின்ஜா e-1 எல்க்ட்ரிக் பைக்கில் கிளிப்-ஆன் ஹேண்டில் பார்களுடன் பிளவுபட்ட எல்இடி ஹெட்லைட் பெறுகிறது, … Read more