ஒரே நாடு ஒரே தேர்தல்… சிறப்பு கூட்டத்தொடரில் என்ன பிளான்? மத்திய அரசு செம ஸ்பீடு வியூகம்!

மத்தியில் ஆளும் பாஜக அரசு ‘ஒரே நாடு ஒரே செயல்திட்டம்’ என்ற வகையில் பல்வேறு விஷயங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் தேர்தலையும் கொண்டு வருவது பற்றி பலமுறை ஆலோசனை செய்துள்ளது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது. அப்படி பார்த்தால் 2024 மக்களவை தேர்தல் நடைபெறும் போது அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

இதில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் சிக்கலை சந்திக்க வேண்டி வரும். இவர்களின் ஆட்சி காலம் நிறைவு பெறுவதற்குள் கலைக்கப்பட வேண்டும். இது மாநில அளவில் பதற்றமான சூழலை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கும் நிலை உண்டாகும். குறிப்பாக தமிழகத்தை எடுத்து கொண்டால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது.

ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு

ஆட்சி முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. மத்திய அரசு கணக்குப்படி பார்த்தால் அடுத்த சில மாதங்களில் ஆட்சி கலைக்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகிக்கிறார்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருத்து கேட்க முடிவு

குழுவில் உள்ள உறுப்பினர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முடியுமா? செயல்படுத்தினால் என்னென்ன சிக்கல்கள் வரும்? பல்வேறு தரப்பினரின் கருத்துகள் என்ன? உள்ளிட்டவை குறித்து தகவல்களை சேகரிப்பர்.

சிறப்பு கூட்டத்தொடர்

மேலும் வல்லுநர்கள் பலரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு விரிவான அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவினர் சமர்பிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகளை மத்திய அரசு எடுக்கும் எனத் தெரிகிறது. முன்னதாக செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி 5 நாட்களுக்கு சிறப்பு கூட்டத்தொடரை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய அரசு திட்டம்

எதற்காக திடீரென ஒரு கூட்டத்தொடர் என்ற கேள்வி நாடு முழுவதும் எழத் தொடங்கியுள்ளது. ஒருவேளை ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம் ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்ற போகிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட குழுவால் சந்தேகம் இன்னும் வலுப்பட்டுள்ளது. இதே விஷயத்தை தான் அரசியல் விமர்சகர்கள் பலரும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.