IND vs PAK: சச்சின் முன்பே சம்பவம் செய்யப்போகும் விராட் கோலி..!

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலக கோப்பை போட்டியில் மோத உள்ளன. மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இந்த அட்டகாசமான போட்டிக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர்ந்து சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து வரும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இன்று தனது பெயரில் மற்றொரு பெரிய சாதனையைப் படைக்க வாய்ப்பு உள்ளது. அவர் மீண்டும் சச்சின் டெண்டுல்கரின் பெரிய சாதனையை முறியடிக்க உள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் மிகப்பெரிய சாதனை 

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக செய்த சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. ஆனால் இன்று விராட் கோலி அதை செய்ய இன்று வாய்ப்பு உள்ளது. 1992 முதல் 2011 உலகக் கோப்பை வரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் சச்சின் அதிகபட்சமாக 313 ரன்கள் எடுத்துள்ளார். அந்த சாதனையை விராட் கோலி இன்று முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சச்சினுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை விராட் கோலி வசம் வர இருக்கிறது.

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த சாதனை சச்சின் (313) பெயரில் உள்ளது. இதையடுத்து இந்த பட்டியலில் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார். கோஹ்லி 2011 முதல் 2019 உலகக் கோப்பை வரையிலான மூன்று போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக மொத்தம் 193 ரன்கள் எடுத்துள்ளார். இன்று விராட் நம்பர்-1 ஆக வாய்ப்பு உள்ளது. இந்த பெரிய சாதனையை முறியடிக்க கோலிக்கு 121 ரன்கள் தேவை. இதற்கு கோஹ்லி பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். தற்போது இருக்கும் பார்மில் இது அவருக்கு பெரிய விஷயமல்ல.

கோலி பேட்டிங் பார்ம்

கோலியின் ஆட்டத்தை பற்றி பேசுகையில், அவர் தற்போது மிகவும் ஆபத்தான பார்மில் உள்ளார். உலகக் கோப்பையில் இதுவரை டீம் இந்தியா விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் சூப்பராக பேட்டிங் செய்துள்ளார். முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 85 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் 55 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அதனை தொடருவார் என எதிர்பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.