எந்த மலையையும் அசால்ட்டாக ஏறலாம்… இந்த பைக் இருந்தால் போதும்… இந்தியாவில் விரைவில்!

Suzuki V-Strom 800DE Djebel First Look: ஆன்-ரோடு பைக்குகளுக்கு உள்ள மவுசை விட தற்போதெல்லாம் ஆஃப்-ரோடு பைக்குகளுக்குதான் அதிக மவுஸ் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பைக்கிலேயே இமயமலை பயணம் உள்ளிட்ட பல சாகச பயணங்களுக்கு இந்த பைக்குகள்தான் அதிக பயன்படுத்தப்படுகின்றன. 

அந்த வகையில், இத்தாலியில் நடந்து வரும் மோட்டார் பைக் எக்ஸ்போ 2024 கண்காட்சியில் சுசுகி நிறுவனம் தனது புதிய ஆஃப்-ரோடு பைக் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கு V-Strom 800DE Djebel என்ற பெயரில் சுசுகி கொண்டு வந்துள்ளது. இந்த பைக் V-Strom 800DE மாடலின் புதிய வகையாகும்.
வரவிருக்கும் இந்த பைக்கில் பின்புற டயர் 17 இன்ச் ஆகும். மேலும் முன்புற டயர் 21 இன்ச் ஆகும். இவை இரண்டும் ஆஃப்-ரோடு பயணத்திற்கு சாலச் சிறந்தவை. இது தவிர, பைக்கில் சக்திவாய்ந்த பேரலல் ட்வின் இன்ஜின் உள்ளது. 

V-Strom 800DE Djebel: தோற்றம்

சுசுகியின் இந்த புதிய பைக்கின் தோற்றத்தைப் பார்க்கும்போது, இது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் அறிமுகமாக உள்ளது. இவை குறிப்பாக, 80s காலகட்டத்து Enduro பைக்குகளால் ஈர்க்கப்பட்டு வடிவைக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதன் இன்ஜினைப் பாதுகாக்க அதில் பேஷ் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. அதில் நீலம் மற்றும் வெள்ளை நிற கிராபிக்ஸ் உள்ளது. இது தவிர, இந்த பைக்கில் ஒரு பெரிய கண்ணாடி உள்ளது. மேலும், அக்ரபோவிக் எக்ஸாஸ்ட் மற்றும் Dunlop TrailMax Raid டயர்கள் உள்ளன.

சுசுகி இந்த ஆஃப்-ரோடு பைக்கில் 17 இன்ச் பின் சக்கரம் மற்றும் 21 இன்ச் முன் சக்கரம் வழங்கியுள்ளது. இதில் 776சிசி பேரலல் ட்வீட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 84 php பவரையும், 78 Nm டார்க்கையும் வழங்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மி.மீ., ஆகும். இதன் இருக்கை உயரம் 855 மிமீ மற்றும் எடை 230 கிலோ.

V-Strom 800DE Djebel: விலை என்ன?

சுசுகியின் விலை மற்றும் ரிலீஸ் தேதியை சுஸுகி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த பைக்கின் விலை ரூ.12 முதல் 13 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுசுகி இந்த பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிற பைக்குகள்

கடந்த ஆண்டு செப்டம்பரில், சுசுகி நிறுவனம் இந்தியாவில் GIXXER SF மாடலின் MotoGP வேரியண்டை அறிமுகப்படுத்தி இருந்தது. இதில் 155cc 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் ஃப்யூவல் இன்ஜெக்ஷன், ஏர் கூல்டு Soc எஞ்சின் உள்ளது. இது 6000RPM 14.0NM டார்க்கையும், 8000PRM 14.1ps ஆற்றலையும் உருவாக்குகிறது. சுசுகி GIXXER மாடலை 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.