West wanted to sell arms only to Pakistan: Jaishankar replies | பாகிஸ்தானுக்கு மட்டுமே மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை விற்க விரும்பின: ஜெய்சங்கர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

முனிச்: ‛‛ கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள், பாகிஸ்தானுக்கே ஆயுதங்களை விற்க விரும்பின; இந்தியாவிற்கு அல்ல” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஜெர்மனி சென்றுள்ள ஜெய்சங்கரிடம் அந்நாட்டு நாளிதழ் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, ரஷ்யா உடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்: கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கே விற்றன. இந்தியாவுக்கு அல்ல. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்கும் முக்கிய நாடுகளாக மாறி உள்ளன என்றார்.

மேலும் அவர், கடந்த கால அனுபவங்களை வைத்து ஒவ்வொரு நாடும் உறவைப் பேணி வருகின்றன. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், ரஷ்யா எங்களின் உறவை எப்போதும் காயப்படுத்தியது கிடையாது. இந்தியாவும் ரஷ்யாவும் நிலையான உறவைப் பேணி வருகின்றன என்றார்.

ரஷ்யா கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பான கேள்விக்கு ஜெய்சங்கர் அளித்த பதிலில், ‛‛ ரஷ்யாவிடம் எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், மற்ற நாடுகளிடம் வாங்க வேண்டியிருக்கும். அப்போது விலை பல மடங்கு உயர்ந்திருக்கும்” . இவ்வாறு அவர் கூறனார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.