ஏர்டெல் பயனர்கள் கவனத்திற்கு… பிரீபெய்டில் புதிய ரீசார்ஜ் பிளான் – விலையும் கம்மிதான்!

Airtel New Prepaid Recharge Plan: இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்று எடுத்துக்கொள்ளும்போது அது கடந்து வந்த பாதைகள் நெடுந்தூரம் எனலாம். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் லேண்ட்லைன் முதல் தனது வேர்களை பரப்ப தொடங்கியது. அதன்பின், மொபைல்கள் வந்த பின்னர் ரிலையன்ஸ் தொடக்க காலத்தில் பல முன்னெடுப்புகளை செய்தாலும் அவற்றில் சில பின்னடைவுகளை அந்நிறுவனம் சந்தித்து. 

ஏர்செல், டாடா டொகோமோ, யுனினார், ஹட்ச் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது துறையில் இருந்து முற்றிலும் காணாமல் போய்விட்டன எனலாம். முன்பும் தற்போது எஞ்சியிருப்பது என்றால் ஏர்டெல், வோடபோன் – ஐடியா (முன்பு இவை தனித்தனியாக இருந்தன) ஆகியவற்றை சொல்லலாம். இருப்பினும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு துறையின் போக்கையே சில ஆண்டுகளில் முற்றிலும் மாற்றிவிட்டது எனலாம். 

போன் கால் பேசுவதற்குதான் மொபைல் என்ற விஷயத்தை ஒழித்து, பயனர்களின் டேட்டா பயன்பாட்டின் மீது கவனம் செலுத்தி அதில் பல தனித்துவமான வியூகங்களையும் அமைத்து தொலைத்தொடர்பு துறையில் தொடர்ந்து முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. போன் கால் பேசுவதற்கு வரம்பற்ற வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் போன்றவற்றை சில ஆண்டுகளுக்கு முன் யாருமே யோசித்திருக்கக் கூட மாட்டார்கள். 

இதில் ஜியோவின் வெற்றி என்னவென்றால், தனது போட்டி நிறுவனங்களையும் தனது பாதையிலேயே ஓடி வர வைத்தது. டேட்டாவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் ஏர்டெல் தற்போது ஜியோவுக்கு ஈடுகொடுத்து சந்தையில் தன்னை நிலைநிறுத்தி வருகிறது. இணைய வேகம், கிராமப்புறங்களிலும் நல்ல நெட்வோர்க் ஆகியவற்றை இரு நிறுவனங்களும் தங்களின் மார்க்கெட்டிங்கில் முதன்மையாக வைத்திருக்கிறது. அதுபோக, தங்களின் ரீசார்ஜ் திட்டங்களிலும் பல சலுகைகளையும், ஆப்பர்களையும், விலை குறைப்புகளையும் செய்து வருகின்றன. 

ஜியோவை போன்றே ஏர்டெல் நிறுவனமும் பல விலை வகைமைகளிலும், டேட்டா பயன்பாடு, டேட்டா தேவை உள்ளிட்டவை சார்ந்து பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. வேலிடிட்டி மற்றும் வசதிகளை பொறுத்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் பல ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஏர்டெல் 2ஜி, 3ஜி சேவைகளில் முதன்மையாக இருந்த நிலையில், தற்போது 4ஜி, 5ஜி இணைய சேவைகளிலும் ஏர்டெல் முதன்மையாக உள்ளது. 

குறிப்பாக, 5ஜி இணைய சேவை என்பது ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அளவில் வழங்கி வருகிறது. அதாவது, 4ஜி சேவைக்காக அடிப்படை பிளானை நீங்கள் வைத்திருந்து, 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்பட்சத்தில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருக்கும் பயனர்கள் 5ஜி இணைய அணுகலை பெறலாம், அதுவும் வரம்பே இல்லாமல். 

இந்நிலையில், ஏர்டெல் புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒன்றையும் தொடங்கி உள்ளது அதாவது, வரம்பற்ற வாய்ஸ் காலிங், இலவச ரோமிங், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் இலவச 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை இந்த பிளான் வழங்குகிகறது. இந்த பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள்கள் ஆகும். மேலும், இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ. 666 தான். 5ஜி இணைய சேவை தற்போது வரம்பற்ற அளவில் வழங்கப்படுகிறது என்பதையும் பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.