Indian-American Engineer Honoured With Texas Highest Academic Award | சென்னை இளைஞருக்கு அமெரிக்காவில் உயரிய விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த பேராசிரியருக்கு அங்குள்ள உயரிய விருதுகளில் ஒன்றான எடித் மற்றும் பீட்டர் ஓ’டோனல் விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த இன்ஜி., மற்றும் பேராசிரியரான அசோக் வீரராகவனை டெக்சாஸ் மாகாணம் கவுரவித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிக உயர்ந்த கல்வி விருதுகளில் ஒன்றான எடித் மற்றும் பீட்டர் ஓ’டோனல் விருது வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளர்ந்து வரும் ஆய்வாளர்களில் சிறந்தவருக்கு டெக்சாஸ் அகாடமி ஆப் மெடிசின், இன்ஜினியரிங், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற அமைப்பு விருது வழங்கி வருகிறது.

அதன்படி, பிரவுன் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ள வீரராகவனுக்கு இந்தாண்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இமேஜிங் தொழில்நுட்பம் தொடர்பாக இவர் மேற்கொண்டு வரும் ஆய்வை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.