பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் உலக சாம்பியனான தென்கொரியாவின் காங் மின்-ஹியுக் – சியோ சியுங்-ஜே இணையை தோற்கடித்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி கூட்டணி, நேற்றிரவு நடந்த மகுடத்துக்கான இறுதி சுற்றில் யாங் போ ஹான்- லீ ஜே ஹூய் (சீனதைபே) ஜோடியுடன் மல்லுக்கட்டியது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்ராஜ்- சிராக் ஜோடி 21-11, 21-17 என்ற நேர் செட்டில் 37 நிமிடங்களில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் அவர்களின் முதல் கோப்பை இதுவாகும். அதே சமயம் பிரெஞ்சு ஓபனை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2022-ம் ஆண்டிலும் வென்றுள்ளனர்.

உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடிக்கு இந்த வெற்றி, பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.