ஏர்டெலின் அசத்தல் ஹோலி ஆபர்! 1000 ஜிபி 5ஜி டேட்டா இலவசம்!

200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட ஏர்டெல் பல புதுமையான சேவைகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது.  ஏர்டெல் நிறுவனம் ஆனது தனது போட்டியாளரான ஜியோவின் ஆபர்களை தீர்த்துக்கட்டும் வகையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இலவச OTT, டிவி சேனல்கள் மற்றும் பல இலவச சேவைகளும் பயனர்களுக்கு கிடைக்க உள்ளன. ஜியோ நிறுவனமானது ஏற்கனவே பல இலவச சேவையை வழங்கி வருகிறது, அதைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல் இலவச OTT ஆப்ஸ் மற்றும் டிவி சேனல்களின் சந்தாவை பயனர்களுக்கு வழங்கத் தொடங்கியது.  ஏர்டெல்லின் இந்த இரண்டு புதிய திட்டங்களில் 1000 ஜிபி டேட்டாவுடன் ரூ.699 மற்றும் ரூ.999 விலையில் வருகின்றன.

ஏர்டெல் ரூ.699 திட்டம்

ஏர்லெல்லின் புதிய ரூ.699 ஏர்ஃபைபர் மாதாந்திர திட்டமாகும். இந்த திட்டத்தில் 40Mbps வேகத்துடன் 1000GB டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.  இந்த திட்டத்தில், பயனர்கள் 350 நேரடி டிவி சேனல்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வசதியைப் பெற்று பயனடைய முடியும். இது தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப் மற்றும் இலவச 4K ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸையும் பெற முடியும். மேலும் இந்த புதிய திட்டத்தை ஏர்டெல் பிளாக் திட்டத்துடன் இணைக்கலாம்.

ஏர்டெல் ரூ.999 திட்டம்

ஏர்டெல்லின் மற்றோரு புதிய திட்டம் ரூ.999க்கு வருகிறது. இதுவும் ஒரு மாதாந்திர திட்டம் ஆகும். இதில், பயனர்களுக்கு 100Mbps வேகத்தில் 1000ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட டேட்டா வரம்பைத் தாண்டிய பிறகும் வரம்பற்ற டேட்டா பயனர்களுக்கு கிடைக்கும். ஆனால் இணைய வேகத்தில் சற்று மாறுபாடு இருக்கும். இதனுடன் ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் மற்றும் 350 லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன.  மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. முந்தைய திட்டத்தை போல ஏர்டெல் பிளாக் திட்டத்தை இதனுடன் இணைக்க முடியும்.

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல்

முன்னதாக Airtel Xstream AirFiber திட்டமானது வெறும் 799 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 100Mbps வேகத்துடன் வந்தது. இதில் மொத்தமாக 1000ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இருப்பினும், கூடுதல் நன்மையாக OTT அல்லது தொலைக்காட்சி சேனல் எதுவும் பயனர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இருப்பினும், தற்போது ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல்லும் மலிவான திட்டங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் பயனர்கள் இலவச OTT மற்றும் பிற சேவைகளை பெற முடியும்.

ஏர்டெல் இலவச 5ஜி

​​ஹோலி பண்டிகையை முன்னிட்டு ​​ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளது. ஹோலி சலுகையாக இலவச அன்லிமிடெட் 5G டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் போஸ்ட்பெய்டு திட்டங்கள் மற்றும் ரூ.239 மற்றும் அதற்கு மேல் ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டவர்கள் இந்தச் சலுகையைப் பெற முடியும். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸைப் பயன்படுத்தி, 5ஜி சாதனங்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கில் இணைந்தவர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு பயனர்கள் இருவரும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.