பலம் வாய்ந்த அணியாக மாறிய மும்பை! அணியில் இணைந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்!

Mumbai Indians: ஐபிஎல் 2024 சீசனுக்காக மும்பை அணி தயார் ஆகி வருகிறது.  இந்த ஆண்டு ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் காயத்தால் அவதி பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான லூக் வுட்டை உடனடியாக நியமித்துள்ளது மும்பை அணி நிர்வாகம்.  பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் லூக் வூட் சிறப்பாக பந்து வீசி தனது திறமையை நிரூபித்து இருந்தார். பல முன்னணி பந்து வீச்சாளர்கள் இருந்தும் இவரது பெயர் அனைத்து இடத்திலும் பேசப்பட்டது.  

Mumbai Indians name Luke Wood as replacement for the injured Jason Behrendorff.

Read more #TATAIPL | @mipaltanhttps://t.co/xwKVjCClBG

— IndianPremierLeague (@IPL) March 18, 2024

குறிப்பாக பவர்பிலேயில் பந்தை ஸ்விங் செய்வதில் புகழ் பெற்றவர் லூக் வூட். இவர் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 5 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.  மேலும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் இதுவரை 140 போட்டிகளில் விளையாடி 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் லூக் வூட்டை ரூ. 50 லட்சம் மதிப்பில் அணியில் எடுத்துள்ளது.  மேலும் மும்பை அணியின் மற்றொரு நட்சத்திர வீரருக்காக அணி நிர்வாகம் காத்து கொண்டுள்ளது. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.  

மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சூர்யகுமார் யாதவின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்புகளுக்காக அணி நிர்வாகம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.  ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரராக உள்ளார். இதுவரை 124 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3249 ரன்கள் அடித்துள்ளார். “பிசிசிஐயில் இருந்து சூர்யகுமார் பற்றிய அப்டேட்டுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் எப்போதுமே உடற்தகுதி பிரச்சனைகளில் இருந்து வருகிறோம், ஆனால் எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் குழு உள்ளது. உடற்தகுதி அடிப்படையில் சில வீரர்களை இந்த ஆண்டு இழக்க நேரிடும்” என்று பயிற்சியாளர் பவுச்சர் கூரியுள்ளார்.

ஐபிஎல் 2024க்கான மும்பை அணி:

ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், லூக் வுட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, தில்ஷன் மதுஷங்கா, ஷ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.