ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது 169 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.