Gold: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

‘அதுக்குள்ளுயுமே?’ என்பது மாதிரி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.50,000-த்தை தொட்ட ஒரே நாளில் ரூ.51,000-த்தையும் தாண்டியுள்ளது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,250-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.50,000-க்கும் விற்பனை ஆனது. இந்த விலையே மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.6,390-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

Gold: தங்கம் விலை எகிறியது…

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் குறைந்து வந்த தங்கம் விலை, 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போரால் மீண்டும் எகிறத் தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் போர் தொடங்குவதற்கு முன்னால் வரை தங்கம் விலை ஒரு பவுனுக்கு கிட்டதட்ட ரூ.42,000-த்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து முகூர்த்த தினங்களும் வருகிற நிலையில், தங்கம் விலையும் எகிறி வருகிறது. ‘தங்கம் விலை குறைய கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறதா?’ என்ற கேள்விக்கு, பொருளாதார நிபுணர்களின் பதில் ‘இப்போதைக்கு இல்லை’ என்பதாகவே இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.