புதுச்சேரி: “காங்கிரஸின் கியாரண்டி பக்கா கியாரண்டி” ஆனால், மோடியின் கியாரண்டி போலி கியாரண்டி என புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தின்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று மாலை புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை […]