யால தேசிய பூங்காவைப் பார்வையிட ஒரு இலட்சத்துக்கும் அதிகாமான வெளிநாட்ட சுற்;றுலாப் பயணிகள் வருகை

வெறிநாட்டு சுற்றுலாப் பயணிசகள் 100000 க்கும் அதிகமானவர்கள் யால தேசிய பூங்கவைப் பார்வையிட வந்துள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில்; இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வஸ்கமுவ, குமண, வில்பத்து, புந்தல, உடவலவ, மின்னேரிய, கவுடுல்ல போன்ற தேசிய பூங்காக்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக் கூடிய வருமானம் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 686, 321 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும் குறிப்பாக 106,004 பேர்     என்றும்  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.