28 ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஜெகன் கட்சி வேட்பாளருக்கு 18 மாதங்கள் சிறை

விசாகப்பட்டினம்: கடந்த 1996-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வெங்கடய்ய பாளையத்தில் 5 தலித்துகள் அவமானப்படுத்தப்பட்டனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினரும், தற்போதைய மண்டபேட்டா தொகுதியின் ஜெகன் கட்சியின் வேட்பாளருமான தோட்டா திருமூர்த்திலு உட்பட மொத்தம் 6 பேர் மீது தலித் வன்கொடுமை பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நடபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

5 தலித்துகள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் உண்மைதான் என்றும், தோட்டா திருமூர்த்திலு உட்பட மொத்தம் 6 பேரும் குற்றவாளிகள் என்றும், இவர்களுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை தலித் கூட்டமைப்பினர் ஆந்திராவில் விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.