T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!

இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.  இந்திய அணியில் யார் யாரை தேர்வு செய்வது என்று தேர்வாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  ஒருசில வீரர்களின் இடங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் மற்ற இடங்களுக்காக கடுமையான போராட்டம் நிலவி வருகிறது.  ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.  அதன் படி ரோஹித் சர்மா தலைமையில் யார் யார் இடம் பெற உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.  ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் மற்றும் விராட் கோலி இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதே சமயம் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்வது என்று அதிக குழப்பம் நீடித்து வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு கார் விபத்து காரணமாக ரிஷப் பந்த் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார். தற்போது பூரண குணமடைந்து ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடி வருகிறார். அதன் பிறகு இஷான் கிஷன் இந்திய அணியில் முக்கிய விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.  ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்களில் அவர் இடம் பெறவில்லை.  இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் தவிர, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். உலக கோப்பை அணியில் இடம் பெற இவர்கள் அனைவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  இவர்களில் எந்த விக்கெட் கீப்பர் அணியில் இடம் பெறுவார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

இஷான் கிஷன்

2016ம் ஆண்டு இந்திய U-19 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக இருந்தவர் இஷான் கிஷன். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2020ல் தனது திறமையான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தார்.  அந்த சீசனில் 145.76 ஸ்டிரைக் ரேட்டில் 516 ரன்கள் அடித்தார்.  அதன்பிறகு சர்வதேச அரங்கில் பல சாதனைகளை புரிந்தார் ஐசான் கிசன். இஷான் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் போது தினேஷ் கார்த்திக் பெயர் நிச்சயம் இருக்கும். இந்த ஆண்டுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்து இருந்த நிலையில், தற்போது இளம் வீரரை போல் சிறப்பாக விளையாடி வருகிறார்.  இவரை 7 போட்டிகளில் விளையாடி 205.45 ஸ்ட்ரைக் ரேட்டில் 226 ரன்கள் எடுத்துள்ளார். 

கே.எல்.ராகுல்

டி20 உலக கோப்பையில் இஷான் கிஷன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் பெயர் கேஎல் ராகுல். இவர் 2013ம் ஆண்டு ஐபிஎல்லில் இருந்து விளையாடி வருகிறார். பல போட்டிகளை தனி ஒரு வீரராக வென்று கொடுத்துள்ளார்.  மேலும் தொடக்க ஆட்டக்காரராக அல்லது மிடில்-ஆர்டர் என எங்கும் இறங்கி விளையாடக்கூடியவர் தினேஷ் கார்த்தி. ஐபிஎல் 2024ல் 6 போட்டிகளில் விளையாடி 138.78 ஸ்ட்ரைக் ரேட்டில் 204 ரன்கள் எடுத்துள்ளார்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சிறந்த பேட்டிங் பார்ம் இருந்தாலும் இந்திய அணியில் அவர் இடம் பிடிக்க கடுமையாக போராடி வருகிறார். டி20 போட்டிகளில் ஆக்ரோஷமான பேட்டிங் இல்லாததால் சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார். ஐபிஎல் 2024ல் 6 போட்டிகளில் விளையாடிய 155.29 ஸ்ட்ரைக் ரேட்டில் 264 ரன்கள் எடுத்துள்ளார்.

ரிஷப் பந்த்

14 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாடி வரும் ரிஷப் பந்த், இந்த சீசனில் தற்போது வரை சிறப்பாக விளையாடி வருகிறார்.  பேட்டிங் தவிர விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.  ஐபிஎல் 2024ல் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 157.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 194 ரன்கள் அடித்துள்ளார். மேலும் டி20 உலக கோப்பையில் பிசிசிஐயின் முதல் தேர்வாக ரிஷப் பந்த் இருப்பார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.