சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் : பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத்: சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறினார். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மேலும் கூறியதாவது:குருவின் மூலமாகத்தான் நாம் அறிவை பெறுகிறோம். ராமானுஜரின் இந்த உருவச்சிலை மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கட்டும். ராமானுஜரின் தைரியம், கருத்துக்கள் மற்றும் சித்தாத்தங்களை பின்பற்றுவோம். இந்த சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு கூறும் .உலகம் முழுவதும் உள்ள … Read more

ஸ்ரீப்ரியா மகளுக்கு நாளை திருமணம்: லண்டன் வங்கி அதிகாரியை மணக்கிறார்

80களில் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீப்ரியா. ரஜினியுடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகை லதாவின் சகோதரர் ராஜ்குமார் சேதுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் சினேகா. லண்டனின் சட்டம் படித்து அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சினேகா. தற்போது சினேகாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மணமகன் அன்மோல் சர்மா. லண்டனில் இரட்டை எம்பிஏ படித்துள்ள இவர் லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். சினேகாவுக்கும், அன்மோல் … Read more

முதல் வாரத்தில் ராஜ்யசபாவில் பணிகள் சுமூகம்: அவை தலைவர் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் முதல்வாரத்தில் முதல் 3 நாட்கள் எந்தவித அமளியும் ஒத்தி வைப்பும் இல்லாமல் பணிகள் 100 சதவீதம் நடந்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அவை தலைவர் வெங்கையா நாயுடு, வரும் நாட்களிலும் இதே போன்ற சூழ்நிலை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31 அன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. தொடர்ந்து 1 ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து ராஜ்யசபாவில், … Read more

விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி பணமோசடி புகார்: மத்திய குற்றப்பிரிவு விசாரிக்க கோர்ட் உத்தரவு

நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த நிலையில் சென்னை சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் ஏடிஜிபியுமான ரமேஷ் குடவாலா, மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரும் பணமோசடி செய்து விட்டதாக சூரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி என்பதால் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்த கொள்வதாகவும், அதனால் வழக்க சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் … Read more

கர்நாடக கல்லூரி மாணவரின் சூட்கேஸ் பெட்டிக்குள் காதலி| Dinamalar

உடுப்பி: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், விடுதிக்கு வந்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரின் ‘சூட்கேஸ்’ பெட்டிக்குள், அவரது காதலியான மாணவி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உடுப்பி மாவட்டம் மணிபால் அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விடுதியில் தங்கியுள்ளனர். சமீபத்தில் அவர்களில் ஒருவர் மிகப்பெரிய சூட்கேஸ் உடன் விடுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து, அதில் என்ன இருக்கிறது என … Read more

சீன பெருஞ்சுவரில் ஒலிம்பிக் சுடர் ஏந்தி ஓடிய ஜாக்கிசான்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 20ம்தேதி வரை நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. புகழ்பெற்ற சீன அரண்மனை, சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அடையாளங்களைக் கடந்து இந்த தீபம் கொண்டு செல்லப்பட்டது. ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று நடிகர் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தி சீனப் பெருஞ்சுவரில் தீப தொடர் ஓட்டத்தை … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்| Dinamalar

மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, ‛பாலிவுட்’ பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்’ மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் … Read more

நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

சென்னை: நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசி உள்ளார். சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என முதல்வர் ரங்கசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகவில்லை.

மத்திய அமைச்சர் பிரதான் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த வாகனத்துக்கான விருதை மத்திய கல்வி அமைச்சகம் பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26ம் தேதி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் மாநிலங்கள் பங்கேற்றன. அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்களில் சிறந்த வாகனத்துக்கான விருதை கல்வித் துறை பெற்றுள்ளது. வேத காலம் முதல் ‘டிஜிட்டல்’ காலம் வரை கல்வித்துறை வளர்ச்சியை சித்தரித்து … Read more