பத்ம விருதுகளை இன்று வழங்குகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!

புதுடெல்லி, பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஷ்டிரபதி … Read more

பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

லாகூர்,  24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் … Read more

எலான் மஸ்கின் தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் 19 வயது மாணவர்..!!

ஆஸ்டின், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க். உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவராக விளங்கும் இவர் ஸ்பைஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய தனியார் ஜெட் விமானத்தில் ஆஸ்டின் நகரத்தில் இருந்து பெர்லின் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இவரது தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் டுவிட்டர் கணக்கான எலான் ஜெட் தெரிவித்துள்ளது. இந்த டுவிட்டர் கணக்கை 19 வயதான ஜாக் … Read more

மணிப்பூர் முதல் மந்திரியாக பிரேன் சிங் மீண்டும் தேர்வு

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப்பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றாலும், இன்னும் எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்கவில்லை. உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியானது. உத்தரகாண்ட், … Read more

2வது ஒருநாள் போட்டி : தென் ஆப்பிரிக்க அணிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

ஜோஹன்ஸ்பேர்க், வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில்  வங்காளதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி  இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில்  நடைபெற்று வருகிறது  இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் தமீம் இக்பால் பேட்டிங்கை தேர்வு … Read more

பாகிஸ்தான்: இந்திய எல்லையை ஒட்டிய சியால்கோட் ராணுவ கிடங்கில் பயங்கர வெடிவிபத்து!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட்  ராணுவ தளவாட சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இராணுவக் கண்டோன்மென்ட்களில் ஒன்றாகும்.அங்குள்ள வெடிமருந்துகள் சேமிக்கும் பகுதியில்தான் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்டு கொண்டே இருந்தது … Read more

பீகார் அரசியலில் திருப்புமுனை; பாஜகவை தோற்கடிக்க லாலுவுடன் இணைந்த சரத் யாதவ்!

புதுடெல்லி, முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், தனது லோக்தந்திரிக் ஜனதா தளத்தை(எல்ஜேடி)  லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்திரிய ஜனதா தளத்துடன்(ஆர்ஜேடி) இணைத்து கொண்டார்.   இது பீகார் மாநில அரசியலை தாண்டி தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு குறித்து சரத் யாதவ் கூறியதாவது, “இது ஒன்றுபட்ட எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கான முதல் படியாகும். பாஜகவை தோற்கடிக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம். இப்போதைக்கு, ஒற்றுமையே எங்கள் முன்னுரிமை. ஒன்றிணைந்த எதிரணிக்கு யார் … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; மகளிர் இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகள் சாம்பியன்

கலிபோர்னியா, பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த ஆசியா முகமது மற்றும் ஜப்பானை சேர்ந்த எனா ஷிபஹாரா இணையை எதிர்த்து சீனாவை சேர்ந்த சூ யிஃபான் மற்றும் யாங் ஜாவோசூவான் என்ற இணை விளையாடியது. முதல் செட்டில் 5-2 என்ற புள்ளி கணக்கில் முகமது மற்றும் ஷிபஹாரா இணை முன்னிலையில் இருந்தது.  ஆனால், சீன இணை அதிரடியாக விளையாடி 7-5 என்ற … Read more

உக்ரைன் மீது மீண்டும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷியா

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா இன்று 25-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.  இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை … Read more

கோவிஷீல்ட் 2-வது டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. கோவேக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்பு திறன் அடிப்படையில், 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது.  இந்த நிலையில் … Read more