கர்நாடகத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு கல்லூரிகள் இன்று திறப்பு

பெங்களூரு,  ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உயர்நிலை பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.  இந்த நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பி.யூ.சி. உள்பட டிகிரி கல்லூரிகள் இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் அமைதி-நல்லிணக்க கூட்டத்தை நடத்தியுள்ளனர்.  அதில் கலெக்டர்கள், கல்லூரிகளில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் … Read more

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. ஒரு நாள் தொடரை முழுமையாக வசப்படுத்திய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டுகிறது. இன்னும் … Read more

கனடா: மீனவர்களின் விசைப்படகு மூழ்கி விபத்து; 7 பேர் பலி, 14 பேர் மாயம்

மாட்ரிட், நேற்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக, நேற்று அதிகாலை காலை 5:24 மணியளவில் கலீசியா துறைமுகத்தைச் சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடிக் கப்பலில் இருந்து மாட்ரிட்டிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல்பகுதியில் அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசைப்படகு, இரண்டு உயிர்காக்கும் படகுகளைக் கண்டுபிடித்தது. அதில் … Read more

ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்க தயாராகும் இந்தியா…!!

புதுடெல்லி,  சர்வதேச பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்படுகிறது. இதில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன. வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கிறது. இந்தநிலையில், தலைமை பொறுப்பை ஏற்பதற்கான ஏற்பாடுகளை இந்தியா தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை … Read more

இலங்கை வீரர் ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு

கான்பெர்ரா,  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் விளையாட முடியாது. நடப்பு தொடரில் கொரோனாவில் சிக்கிய 3-வது இலங்கை வீரர் ஆவார். ஏற்கனவே குசல் மென்டிஸ், பினுரா பெர்னாண்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 வயதான ஹசரங்காவை சில தினங்களுக்கு … Read more

கனடாவில் அவசர நிலை பிரகடனத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

ஒட்டாவா, கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் கடந்த மாதம் 29-ந்தேதி … Read more

மராட்டிய சட்டசபையில் மார்ச் 11-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

மும்பை, மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது. இதில் மார்ச் 11-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  மார்ச் 25-ந் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நாக்பூரில் நடைபெறுவது வழக்கம். ஆனால், முதல்-மந்திரி … Read more

பெண்கள் உலக கோப்பை: சாம்பியம் பட்டம் வெல்லும் அணிக்கு எத்தனை கோடி தெரியுமா..?

துபாய்,  12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.  போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.26½ கோடியாகும். இது முந்தைய உலககோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை விட 75 சதவீதம் கூடுதலாகும். சாம்பியன் கோப்பையை வெல்லும் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33.84 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 57 லட்சத்து 69 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே … Read more

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு…!

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் … Read more