முதல் பாகத்தில் இருந்த புதிர்களுக்கு இரண்டாம் பாகத்தில் விடை கிடைத்ததா?: ஜீவி 2 திரை விமர்சனம்

சென்னை: வெற்றி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘ஜீவி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. விஜே கோபிநாத் இயக்கியிருந்த இப்படத்தின் திரைக்கதையை பாபு தமிழ் எழுதியிருந்தார். ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன் விமர்சனம் இதோ. திரைக்கதையில் அசத்திய ஜீவி பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் 2019ல் வெளியான ‘ஜீவி’ திரைப்படம், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி என வித்தியாசமாக உருவாகியிருந்தது. மிஸ்ட்ரி … Read more

SIIMA Awards 2022…தமிழில் சிறந்த நடிகர் யார்…பரிந்துரைக்கப்பட்ட அந்த 6 பேர் இவங்க தான்

சென்னை : தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கெளரவிக்கும் விதமாக சைமா விருதுகள் (South Indian International Movie Awards) 2012 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாக சைமா விருது கருதப்படுகிறது. மலையாளம், … Read more

தனுஷ் பட ஹீரோயினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. அம்மாவான சந்தோஷத்தில் சோனம் கபூர்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் பாலிவுட் நடிகையுமான சோனம் கபூர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியா படத்தின் மூலம் ரன்பீருக்கு ஜோடியாக பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் சோனம் கபூர். தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ராஞ்சனா படத்தில் சோயா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திழுத்தார். சோனம் கபூர் ஸ்லம்டாக் மில்லியனர், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலேயே நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகர் … Read more

திரைக்கதைக்கு பெயர் பெற்ற தமிழ் திரையுலகம்..லாஜிக் இல்லா மேஜிக் வைத்து எத்தனை நாள் ஜெயிக்க முடியும்?

இயக்குநர் இமயம், சிகரம், பாக்யராஜ், விசு என திரைக்கதைக்காக பெயர் பெற்ற தமிழ் திரையுலகம் வலுவான திரைக்கதை இல்லாமல் தள்ளாடுகிறது. போதாத குறைக்கு பான் இந்தியா படம் என வன்முறை பட்ஜெட் படங்கள் வேறு. மீளுமா திரையுலகம். தமிழில் பல வலுவான திரைக்கதை உரையாடல் ஆசிரியர்கள் இருந்தனர், தற்போது இயக்குநர்களே அத்தனையயும் தீர்மானிக்கின்றனர் இதனால் வலுவில்லாத படங்கள் வருகின்றன என இயக்குநர் வசந்தபாலன் போன்றோரே விமர்சிக்கின்றனர். திரைக்கதை இல்லாமல் இயக்குநர்களே இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள் என திரைக்கதை … Read more

அரசியலில் குதிக்க போகிறாரா த்ரிஷா?…இவர் கொடுத்த ஐடியாவா இது?

சென்னை : தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகாலமாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் என கிட்டதட்ட அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் த்ரிஷா.புகழின் உச்சியில் உள்ளார் த்ரிஷா. படங்களில் நடிப்பதுடன் சமூக நலனுக்காக செயல்படும் சில என்.ஜி.ஓக்களுக்கு விளம்பர தூதராகவும் த்ரிஷா செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் த்ரிஷாவை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். கடைசியாக பரமபத விளையாட்டு என்ற படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். … Read more

இந்தியளவில் இந்த மாதமும் முதலிடத்தில் விஜய் தான்.. 10வது இடத்தில் அஜித்.. ரசிகர்கள் மோதல்!

சென்னை: ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள இந்தியாவிலேயே பாப்புலரான ஆண் நடிகர்கள் பட்டியலில் தொடர்ந்து இந்த மாதமும் நடிகர் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார். ஆர்மேக்ஸ் மீடியா சமீபத்தில் தமிழில் பாப்புலரான நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது அதிலும் விஜய் தான் முதலிடம். ஆனால், அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த அஜித்துக்கு இந்தியளவிலான பட்டியலில் 10வது இடம் கிடைத்துள்ளது. ஆர்மேக்ஸ் மீடியா பட்டியல் ஆர்மேக்ஸ் மீடியா எனும் தனியார் நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பாப்புலரான நடிகர்கள், நடிகைகள், … Read more

சோழனுக்காக பறக்கும் ரசிகர்கள் கொடி…சோழா சோழா பாடல் செய்த சாதனை

சென்னை : கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இறங்கி உள்ளன. அதில் முதல் கட்டமாக படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, அடுத்ததாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பொன்னி நதி பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிட்டனர்.அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை … Read more

எங்கேயும் அப்பா பெயரை பயன்படுத்தவில்லை.. நெபாடிசம் பற்றி வெளிப்படையாக பேசிய அருண் விஜய்!

சென்னை: ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அப்பா சினிமாவில் இருப்பதால், அவர்கள் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்று நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அருண் … Read more

ஜெய்பீம் பார்த்து கண்ணீர் சிந்திய சீனர்கள்.. மொழிகளை கடந்து மனங்களை கவர்ந்த சூர்யா படம்!

சென்னை: சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து இரு தரமான படங்களை எடுத்து ஆஸ்கர் கதவுகள் வரை தட்டினார் நடிகர் சூர்யா. ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றால் என்ன, மொழிகளை கடந்து பல மனித மனங்கள் அந்த படத்தை பார்த்து பாராட்டியதே அத்தனை விருதுகளுக்கும் மேலான ஒன்று தான். இந்நிலையில், பெய்ஜிங்கில் திரையிடப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து சீனர்கள் கண்ணீர் சிந்திய காட்சி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி தமிழ் சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. சூர்யாவின் ஜெய்பீம் … Read more

முத்தக்காட்சிகளுக்கு அப்பாவே ஓகே சொன்னாரு.. இமோஜி நாயகிகள் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

சென்னை: இயக்குநர் ரங்கசாமி இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானஸா சவுத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் இமோஜி அடல்ட் கன்டென்ட்டாக உருவாகியுள்ள வெப் தொடர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதில் நடித்த நடிகைகள் தேவிகா சதீஷ், மானஸா சவுத்ரி ஆகியோர் நமது பிலிம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம். ஜிம்னாஸ்டிக் பிடிக்கும் கேள்வி: தேவிகா, வெப் தொடரில் நீங்கள் உங்கள் கால்களை எளிதாக கதாநாயகன் மீது … Read more