அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு எப்படி பிரச்சனை.. ஆர்பிஐ முடிவென்ன?

மும்பை: அமெரிக்காவின் மத்திய வங்கியானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வட்டி விகிதத்தினை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவு தான் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதமானது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் இருந்த குறைந்தபட்ச அளவினை எட்டிய நிலையில், அதில் இருந்து 3% என்ற அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. 8 ஏக்கரில் … Read more

தொடர் சரிவில் தங்கம் விலை.. 7 மாத சரிவு விலையில்.. வாங்க காத்திருப்போருக்கு சரியான சான்ஸ்!

தங்கம் (gold price) விலையானது சர்வதேச சந்தையில் இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இந்திய சந்தையிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.இது இன்னும் குறையுமா? குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? நிபுணர்களின் கணிப்பு? தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய … Read more

வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. பங்குச்சந்தை தடுமாற்றம்.. ஆர்பிஐ முடிவு என்ன..?

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பந்தாடி வரும் பணவீக்கத்தைக் குறைக்க அந்நாட்டின் மத்திய வங்கி இரண்டு நாள் நாணய கொள்கை முடிவில் பல தரப்பினர் எதிர்பார்த்த படியே தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இதன் விளைவு அடுத்த சில மணிநேரத்தில் இந்திய சந்தையில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது, வட்டி விகித உயர்வால் இந்திய சந்தையில் இருந்த அன்னிய முதலீடுகள் வெளியேறத் துவங்கியது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஓரே நாளில் 42 … Read more

திரும்ப கொடுக்காட்டி சம்பளத்தில் கழிப்போம்.. அதிகமாக கொடுத்த போனஸை திரும்ப கேட்கும் ஹோண்டா!

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் நடப்பு மாதத்தில், அதன் ஊழியர்களுக்கு அதிகமான போனஸினை தவறுதலாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் தவறுதலாக அதிகமாக செலுத்தப்பட்ட போனஸின் ஒரு பகுதியை, மீண்டும் திருப்பிச் செலுத்த ஊழியர்களுக்கு ஒரு மெமோவினையும் அனுப்பியுள்ளது. இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை! அதிக போனஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, சமீபத்தில் அதன் மேரிஸ்வில்லே, ஓஹியோ தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியுள்ளது. அதில் நிறுவனம் … Read more

ஒவ்வொரு இலக்குகளுக்கும் வெவ்வேறு வகை ஃபண்ட்கள்.. மியூச்சுவல் ஃபண்ட் ரகசியம்!

மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது பாதுகாப்பானது மட்டுமின்றி அதிக வருவாய் தரும் வகையில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட காலத்தை இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது. ஒவ்வொரு இலக்குகளுக்கும் வெவ்வேறு வகையான ஃபண்ட்கள் உள்ளன என்பதும் அந்த ஃபண்ட்களை எப்படி தேர்வு செய்வது என்பதை இப்போது … Read more

மார்க் ஜுக்கர்பெர்க் வீட்டிற்கு வரும் குட்டி தேவதை.. 3வது குழந்தை எப்போது?

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது குழந்தையை அவர் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுக்கர்பெர்க் அவர்களின் மனைவி பிரிசில்லா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க் வீட்டில் ஒரு புதிய விருந்தாளி இருக்கும் என்பதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த குழந்தையை வரவேற்க தயாராகி … Read more

ஐபோன் வாங்குவதற்காக ரூ.41,000 கூடுதலாக செலவு செய்த கேரள இளைஞர்: காரணம் இதுதான்!

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 சீரியஸ் ஐபோனை வாங்குவதற்காக துபாய் சென்றுள்ளார். இந்தியாவில் இன்னும் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வெளியாகாத நிலையில் இந்த போனை அவர் துபாயில் சென்று வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோனை வாங்குவதற்காக அவர் கூடுதலாக விமான பயணம் மற்றும் தங்கும் செலவாக 41 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 14-க்கு இவ்வளவு வரியா.. ஆடிப்போன இந்தியர்கள்..?! கேரள … Read more

இந்தியாவில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை வங்கி கணக்கு தொடங்கலாம்?

தற்கால உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கி கணக்கு அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் சேமித்து வைத்த பணத்தை டெபாசிட் செய்வதற்கும் பணப்பரிமாற்றம் செய்வதற்கும் வங்கி கணக்கு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பெரும்பாலானோர் ஒரு வங்கிக்கணக்கை மட்டும் தொடங்கி பணப்பரிமாற்றம் செய்து வரும் நிலையில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பார்கள். இந்தியாவில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை வங்கி கணக்கு வைத்திருக்கலாம்? ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் நன்மைகள் … Read more

இலவசமாக விமானத்தில் செல்ல வேண்டுமா? 50 லட்சம் பேருக்கு வாய்ப்பு தரும் நிறுவனம்!

வாழ்க்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என ஒவ்வொருவருக்கும் மனதில் ஆசையிருக்கும். ஆனால் அதே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்வதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதன் காரணமாக பலர் தங்கள் ஆசையை ஒத்தி போட்டு வருவார்கள். இந்த நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் 50 லட்சம் பேர்களுக்கு இலவச விமான சேவை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி! ஏர் ஏசியா இந்தியாவின் … Read more

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பேவரைட் பங்கு.. இவ்வளவு பேர் வாங்கியிருக்காங்களா.. உங்ககிட்ட?

அஷீஷ் கச்சோலியா போர்ட்போலியோ: மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றான பெஸ்ட் அக்ரோலைஃப், விவசாய துறையினை சேர்ந்த ஒரு பங்காகும். இப்பங்கின் விலையானது கடந்த 6 வருடங்களில் 8,000% ஏற்றம் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த பங்குகளில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் செப்டம்பர் 20, 2022 அன்று மேற்கொள்ளப்பட்ட மொத்த ஒப்பந்தத்தில், குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் 1.78 லட்சம் பங்குகளை, 1222.60 ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 21.76 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை … Read more