தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்: பிரதமர் மோடி, அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

நாகர்கோவில்: தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏஎன்ற பெருமைபெற்ற வேலாயுதன் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கடை அருகே உள்ள கருப்புக்காட்டைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவர் தனது 13-வது வயதில் 1963-ம்ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். கடந்த 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். கடந்த 1989-ல் சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு 4-வது இடமே கிடைத் தது. கடந்த … Read more

பிரதமருக்கு ரேடியோவை பரிசாக அனுப்பிய ஒய்.எஸ்.ஷர்மிளா

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கடப்பா மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று கடப்பாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடப்பா மக்களவைத் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அவினாஷ் ரெட்டி தேர்தல் பயம் காரணமாக பாஸ்போர்ட் எல்லாம் தயார் நிலையில் வைத்துள்ளார். விரைவில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு குற்றவாளி வெற்றி பெற்றதாக அர்த்தம். Source link

நலன் குமரசாமி படத்துக்காக சிலம்பம் கற்கிறார் கார்த்தி

சென்னை: நடிகர் கார்த்தி, நலன் குமரசாமி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் எம்.ஜி.ஆர் ரசிகராக, ராஜ்கிரண் நடிக்கிறார். அவர் பேரனாக கார்த்தி நடிக்கிறார். அவரும் எம்.ஜி.ஆர், ரசிகராகவே வருகிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதற்கு ‘வா வாத்தியாரே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் … Read more

கருப்பு, பழுப்பு நிறம் சிறந்தது: மருத்துவர் சு.முருகுசுந்தரம் விளக்கம்

இந்தியர்களை தோலின் நிறத்தின் அடிப்படையில் பிரித்து காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை தோல் மருத்துவ மைய இயக்குநர் மருத்துவர் சு.முருகுசுந்தரம் கூறியதாவது: தோலுக்கு நிறம் கொடுக்கக் கூடியது நிறமி செல்கள் (மெலனோசைட்). கருப்பு, பழுப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைவருக்கும் நிறமி செல்கள் ஒரே எண்ணிக்கையில்தான் உள்ளது. அவை உற்பத்தி செய்கிற நிறமியின் பெயர்தான் மெலனின். அதன் அளவுதான் வேறுபடுகிறது. நிறமி … Read more

ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய புதிய மைக்ரோசிப்: இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த அழைப்பு

சென்னை: குறைந்த செலவில் உயர் திறனுடன் சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மைக்ரோசிப் சாதனத்தை இந்திய தொழில்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைன்ட்குரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் குறைந்த செலவில் உயர்திறன்மிக்க புதிய மைக்ரோசிப் சாதனத்தை (‘Secure IoT’) வணிகரீதியாக உருவாக்கியுள்ளது. இந்த சாதனம், ஸ்மார்ட்வாட்ச், வாட்டர் மற்றும் கியாஸ் மீட்டர், மின் வாகன பேட்டரி மேலாண்மை உள்ளிட்டவற்றில் பெரிதும் பயன்படும். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் … Read more

காற்றாலை மூலம் 2,000 மெகாவாட் உற்பத்தி: தினசரி மின் தேவை பூர்த்தியாகும் என மின்வாரியம் நம்பிக்கை

சென்னை: தமிழகத்தில் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். இந்த காலகட்டத்தில் காற்றாலையில் இருந்து தினமும்2,500 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், தினசரி மின்நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2-ம் தேதி தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.இந்நிலையில், காற்றாலை சீசன்தொடங்கி உள்ளதால், காற்றாலைகளில் இருந்து தினசரி சராசரியாக 2 ஆயிரம் … Read more

தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதா?: பிரதமர் மோடி கண்டனம்

வாரங்கல்: தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தென்னிந்தியாவில் வசிக்கும் நீங்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றவர்கள் என சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தோல் நிறத்தின் அடிப்படையில் நாட்டு மக்களை அவர் அவமதித்துள்ளார். நாட்டு மக்களை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற இனவெறி மனப்பான்மையை ஒருபோதும் ஏற்க முடியாது. பிட்ரோடாவின் இந்த கருத்து பற்றி … Read more

அனைத்து அரசு பள்ளிகளிலும் மே இறுதிக்குள் இணைய வசதி: பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள் இணையதள வசதி ஏற்படுத்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில், எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில்,தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது. இதை கருத்தில் கொண்டு, முதல்வரின் சீரிய முயற்சியால் அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 46.13 லட்சம் மாணவர்கள் பயன்: அந்த வகையில், அரசுப் … Read more

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளராக இந்தியா சாதனை

புதுடெல்லி: உலக மின் ஆற்றல் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும் எம்பர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2015-ல் சூரிய சக்தி உற்பத்தியாளர் வரிசையில் இந்தியா 9-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் 2023-ல் இந்தியா சூரிய ஒளி சக்தி உற்பத்தியில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் 4-வது இடத்தில் இருந்த ஜப்பானை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. தற்போது இந்தியாவானது அதிக அளவு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அபரிமிதமான சூரிய ஒளி மின் ஆற்றலை உற்பத்தி செய்து … Read more

“கோவை சிறையில் என் உயிருக்கு அச்சுறுத்தல்” – நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையீடு

மதுரை: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் சங்கருக்கு எதிராக பெண்கள் துடைப்பத்துடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர். காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5-ம் தேதி கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் காரில் சோதனையிட்ட … Read more