’ருமேனியாவில் 3 நாட்கள் வரை வரிசையில் நிற்கணும்’ – உக்ரைனில் இருந்து நாடு திரும்ப இந்திய மாணவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள், ஐரோப்பிய எல்லை நாடான ருமேனியாவில் மூன்று நாட்கள் வரை வரிசையில் நிற்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இன்று நண்பகல் வரை டெல்லிக்கு வந்த ஆறு மீட்பு விமானங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 150 பேர் வந்தடைந்துள்ளனர். ரஷ்யப் போரினால் உக்ரைனில் சிக்கியவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப பலவேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். இவர்கள் மீட்பு விமானங்களை பிடிக்க, மேற்குப் பதியிலுள்ள ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலாந்து மற்றும் ருமேனியாவிற்கு பேருந்துகளில் செல்ல … Read more

மீட்புப் பணியில் இந்திய விமானப்படை: உக்ரைனில் இருந்து 630 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைனில் இருந்த 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மேலும் மூன்று சி-17 விமானங்கள் அதிகாலையிலும் ஹிண்டான் விமான தளத்திற்குத் திரும்பின. உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, … Read more

மார்ச் 4: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,594 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

உக்ரைன் போர் பகுதிகளில் சிக்கியுள்ள 1,000 இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கிழக்கு உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் போர்ப் பதற்றத்திற்கு இடையில் சிக்கியிருக்கும் சுமார் 1,000 இந்தியர்களை மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது போர்ப் பதற்றம் நிலவி வரும் சுமி பகுதியில் 700 பேர், கார்கிவ் பகுதியில் 300 பேர் என சுமார் 1000 இந்தியர்கள் இன்னும் கிழக்கு உக்ரைன் பகுதியில் சிக்கி இருக்கிறார்கள் என்றும், அவர்கள் அங்கிருந்து அழைத்து வருவதற்கு பேருந்துகள் ஏற்பாடு செய்வது பெரும் … Read more

பெஷாவர் மசூதியில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு:  30 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் தொழுகையின்போது நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 30 பேர் உடல்சிதறி பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் மசூதி ஒன்று உள்ளது. அங்கு இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் … Read more

தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் சசிகலா: ஓபிஎஸ் சகோதரர் உடன் சந்திப்பு

தூத்துக்குடி: தென் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா திருச்செந்தூரில் சந்தித்துப் பேசினார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வி.கே.சசிகலா இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்யும் சசிகலா, தனது ஆதரவாளர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அவர், பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் … Read more

’வந்தால் செல்ல நாய்க்குட்டியுடன்தான் வருவேன்’ – சொன்னதைச் செய்து காட்டிய டேராடூன் மாணவர்!

புதுடெல்லி: உக்ரைனில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர், ’எனது செல்ல நாய்க்குட்டியுடன்தான் இந்தியா திரும்புவேன்’ என்று கூறிவந்த நிலையில், அவர் விருப்பப்படியே அனைத்து தடைகளையும் தகர்த்து தனது சொந்த ஊரான டேராடூனுக்கு செல்ல நாய்க்குட்டியுடன் வந்து சேர்ந்தார். உக்ரைனில் பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர் ரிஷப் கவுஷிக். இவர் தனது செல்ல நாய்க்குட்டி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். தனது செல்ல நாய்க்குட்டிக்கு அவர் வைத்துள்ள பெயர் மாலிபு. அதனையும் தன்னோடு அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு … Read more

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் ஆணைய தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ஜெனிவா: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான ஆணையம் ஒன்று அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வருவதற்காக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் இன்று (மார்ச் 4) வாக்கெடுப்பு நடத்தியது. உக்ரைனில் நிலவி வரும் மனித உரிமைகள் குறித்தான … Read more

'தி மயிலாப்பூர் கிளப்'-புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கான வாடகை பாக்கியை செலுத்தவில்லை எனக் கூறி, ‘தி மயிலாப்பூர் கிளப்’புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 24 கிரவுண்ட் நிலத்தை ‘தி மயிலாப்பூர் கிளப்’ குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த நிலத்துக்கு 3 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, அத்தொகையை செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் … Read more

”உக்ரைனில் இருந்து மாணவர் நவீன் உடலுக்கு பதிலாக…” – கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கருத்தால் சர்ச்சை

பெங்களூரு: “உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடலுக்கு பதிலாக 10 மாணவர்களை அங்கிருந்து மீட்டு வந்துவிடலாம்” என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்த மாணவர் நவீன். இவர் கார்கிவ் தேசிய மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த நிலையில், போர்ச் சூழலுக்கு இடையே அந்நகரில் உள்ள கடைக்கு உணவு வாங்க சென்றபோது வான்வழித் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more