ஸ்திரமான எரிசக்தி வளங்கள் மூலம்தான் நிலையான வளர்ச்சி சாத்தியம்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அளவுக்கு பசுமை எரிசக்தி வளங்கள் உள்ளன. பிற நாடுகளுக்கு ஹைட்ரஜன் எரிசக்தியை வழங்கும் கேந்திரமாக மாறும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது. நாட்டில் இயற்கையாக அமைந்த சாதக அம்சங்களை பயன்படுத்தி ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியும் என்று பிரமதர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொளி கருத்தரங்கில் அவர் பேசியதாவது: நிலையான வளர்ச்சியை சீராக எட்ட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் இலக்காகும். இத்தகைய ஸ்திரமான வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் நிலையான எரிசக்தி வளங்கள் … Read more

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் அமெரிக்க உறவை துண்டித்தது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே 2-வது சுற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் இன்ஜின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி … Read more

ரூ.564 கோடி மோசடி; பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகி கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: ரூ.564 கோடி மோசடி செய்த தாக பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகி அகமது ஏ.ஆர் புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் பண மோசடி செய்ததாக கடந்த 2018-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட … Read more

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் சுமார் 22 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். சுமார் 15 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பின்னணியில் பாகிஸ்தானின் பெஷாவர் நகர், கோச்சா … Read more

உக்ரைன் அணு மின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது: போரை நிறுத்த இந்தியா வேண்டுகோள்

கீவ்: உக்ரைனின் மிகப்பெரிய அணு மின்நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. செர்னிஹிவ் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் வீசிய குண்டுகளில் 47 பேர் உயிரிழந்தனர். போர் தீவிரமடைந்திருப்பதால் உக்ரைன் அதிபர் ஜெலன்கிபோலந்தில் தஞ்சமடைந் திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் நேற்று 9-வது நாளாக நீடித்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள், போலீஸ் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் நேற்று குண்டுகளை … Read more

ஆரணி நகராட்சி துணைத் தலைவர் பதவி: திமுக அணி கவுன்சிலர்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றி; காங்கிரஸ் தோல்வி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால், காங்கிரஸ் தோல்வி அடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் 15 வார்டுகளை அதிமுகவும், 12 வார்டுகளை திமுகவும், தலா 2 வார்டுகளை காங்கிரஸ் மற்றும் மதிமுகவும், தலா ஒரு வார்டில் சுயேச்சை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் … Read more

கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதியாக பிடிக்கப்படவில்லை: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் எவரும் பணயக் கைதியாக பிடிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்கள் சிலரை உக்ரேனிய பாதுகாப்புப் படை யினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அலுவலம் நேற்று தெரிவித்தது. “இந்திய மாணவர்களை மனிதக் கேடயமாக உக்ரேனிய பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துகிறார்கள். எல்லா வழிகளிலும் அவர்கள் ரஷ்ய எல்லைக்கு செல்வதைத் தடுக்கிறார்கள்” என்றும் தெரிவித்தது. ரஷ்ய அதிபர் புதினும் இந்திய … Read more

உக்ரைனில் ரட்சகனாக மாறிய இந்தியர் நடத்தும் உணவகம்: 130-க்கும் மேற்பட்டோருக்கு அடைக்கலம்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஓர் இந்திய உணவகம், போரால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ரட்சகனாக மாறியுள்ளது. ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் இக்கட்டான சூழ்நிலையிலும் 130-க்கும் மேற்பட்டோருக்கு அடைக்கலம் அளித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில், ‘சாதியா’ என்ற உணவகத்தை குஜராத்தை சேர்ந்த மனீஷ் தேவ் என்பவர் நடத்தி வருகிறார். ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளதால் இது ஒரு வகையில் பதுங்குமிடமாக மாறியுள்ளது. ரஷ்ய படைகளின் தாக்குதல் … Read more

தமிழகத்தில் இன்று 261 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 76 பேர்: 705 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 261 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,594. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,09,078. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 84,75,423 பேர் வந்துள்ளனர். சென்னையில் 76 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

கரோனா 3-வது அலை மரணம்; 92% பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஐசிஎம்ஆர் தகவல்

புதுடெல்லி: கரோனா 3-வது அலையில் உயிரிழந்தவர்களில் ஏறக்குறைய 92 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே என ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. மே, ஜூன் மாதங்களில் இதன் தாக்கம் அதிகரித்து நவம்பர் மாதத்தில் குறையத் தொடங்கியது. ஆனாலும் இந்தாண்டு பிப்ரவரியில் கரோனா 2-வது அலை பரவத் தொடங்கி அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நாட்டில் லட்சக் … Read more