வகுப்புவாத பாடல், மதச்சார்பற்ற இசையுடன் வாக்குகளை கொள்ளை அடிக்கும் அரசியல் கட்சிகள்: மத்திய அமைச்சர் நக்வி குற்றச்சாட்டு

ராம்பூர்: வகுப்புவாத பாடல்களுடன் கூடிய மதச்சார்பற்ற இசையை இசைத்து எதிர்க்கட்சிகள் வாக்குகளை கொள்ளை அடிக்கின்றன என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார். உத்தரபிரதேசத்தில் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட வாக்குப்பதிவில் ராம்பூரிலுள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் தனது வாக்கைச் செலுத்தினார். வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: உ.பி.யில் கடந்த 5 ஆண்டுகளில் பல நல்ல திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக … Read more

தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: “தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்“ என அமெரிக்க ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத் தெரிவித்துள்ளார். உலகளவில் மிக அதிகமான கரோனா நோயாளிகளையும், கரோனா உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது அமெரிக்கா. ஆனால், அங்கு இன்னும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கலகம் செய்து கொண்டிருக்கின்றனர். ராணுவத்திலும் ஒரு குறிப்பிட்ட சாரார் தடுப்பூசி போடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத், “ராணுவத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களால் படைகளின் மற்ற வீரர்களுக்கு அச்சுறுத்தல். படைகளை எப்போதும் தயார்நிலையில் … Read more

10, 12-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான சர்ச்சை: தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்

சென்னை: 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், வினாத்தாள் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாளை தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புமாணவர்களுக்கான முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9-ம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோன்று திருப்புதல் தேர்வும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. … Read more

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் ஏபிஜி ஷிப்யார்டு முறைகேடு நடந்தது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத மோசடி நிகழ்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் (2013) நிகழ்ந்தது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும்ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 வங்கிகளில் பெற்ற ரூ.22,842 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. கடந்த 2013-ம்ஆண்டு நிகழ்ந்த இந்த மோசடியின்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி … Read more

அமெரிக்காவிலும் எதிரொலித்த ராகுல் பேச்சு: பற்றி எரியும் பாக், சீனா நட்புக் கருத்து

வாஷிங்டன்: பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாளிகளாகிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதை ஏற்றுக்கொள்ள இயலாது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று நேற்று (புதன்கிழமை) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய விவகாரங்கள் அமெரிக்கா வரை எதிரொலித்துள்ளது. முன்னதாக நேற்று அவையில் பேசிய ராகுல் காந்தி, “இந்தக் குடியரசு தின விழாவிற்கு ஒரு விருந்தினரை அழைத்துவர முடியவில்லை. அது ஏன் என்று உங்களுக்கு நீங்களே … Read more

பிப்ரவரி 14: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,37,896 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.13 வரை பிப்.14 பிப்.13 … Read more

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: உ.பி. 23%, கோவா 26%, உத்தராகண்ட் 19%

லக்னோ: உத்தராகண்ட், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. உ.பி.யில் 2ஆம் கட்ட தேர்தலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசத்தில் 23.03 % வாக்குப்பதிவாகியுள்ளது. கோவாவில் 26.63 % மற்றும் உத்தராகண்டில் 18.97% வாக்குப்பதிவாகியுள்ளது. கோவா மாநிலத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: கோவா சட்டப்பேரவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 11 மணி நிலவரப்படி கோவாவில் 26.63 % வாக்குப்பதிவாகியுள்ளது. “கோவா … Read more

சாலையில் ஹாக்கி விளையாட்டு… – கனடாவை திணறிடிக்கும் லாரி ஓட்டுநர்களின் போராட்டம்

ஒட்டாவா: கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்டுநர்களுக்கு … Read more

தென்காசி அருகே 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நொச்சிக்குளம் கிராமத்தின் விவசாய விளை நிலத்தில் 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் சீ.ராஜகோபால், முனைவர் பிறையா, ஆகியோர் தலைமையிலான குழுவினர் தரையின் மேற்பரப்பில் பரவிக் கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலத்து கல்வெட்டுக்கள் தொடர்பாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மன்னர் திருமலை நாயக்கர் … Read more

பிஎஸ்எல்வி சி-52: வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று (பிப்.14) காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது. 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் … Read more