பாஜகவிற்கு டப்பிங் பேசும் பழனிசாமி யாரை மிரட்டுகிறார்? – 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: “‘2024 முதல் நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப் போகிறது’ என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. பாஜகவிற்கு டப்பிங் பேசும் பழனிசாமி யாரை மிரட்டுகிறார்?” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆவேமாகப் பேசினார். மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகரத்துக்கு செய்யப்பட்ட சாதனைகளை விளக்கிய அவர், … Read more

பஞ்சாபில் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்யும் பாஜக தலைவர்கள்: விவசாயிகள் எதிர்ப்பு காரணமா?

புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைவர்களில் சிலர் தம் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்துள்ளனர். இதற்கு அம்மாநில விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்புவது காரணமாக எனக் கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாபில் 2007 மற்றும் 2012 இல் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த சிரோமணி அகாலி தளம் கட்சியுடன்(எஸ்ஏடி) கூட்டணி அமைத்திருந்தது பாஜக. தனது தலைமையிலான மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டதிருத்தங்களை எதிர்த்து எஸ்ஏடி கூட்டணியிலிருந்து விலகியது. இதன் காரணமாக, பாஜக பஞ்சாபில் முதன்முறையாக தம் … Read more

ஒரு மாத பிளான், ஹெலிகாப்டர் அழிப்பு, மனித வெடிகுண்டு… ISIS தலைவர் அல் குரேஷியின் இறுதி நிமிடங்கள்

சிரியா: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி, அமெரிக்க படைகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது இறந்துவிட்டார் என்று நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஐஎஸ்ஐஎஸ் முன்னாள் தலைவர் அல் பாக்தாதி இறந்தபின்பு புதிய தலைவராக அல் குரேஷி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து அவரை அமெரிக்க கொல்லத் திட்டமிட்டுவந்தது. இந்தநிலையில்தான் மத்திய கிழக்கு நாடான சிரியாவின் அத்மே நகரில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் குடும்பத்துடன் வசித்துவந்த அவரை நேற்றுமுன்தினம் அமெரிக்க படைகள் … Read more

’எங்களை மக்கள் நம்ப தொடங்கியுள்ளனர்’ – மதுரையில் பாஜக வேட்பாளராக களம் காணும் திருநங்கை வேட்பாளர்

மதுரை: மதுரை மாநகராட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை தனது பிரச்சாரத்தால் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தங்களை மக்கள் நம்பத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் திருநங்கைகளும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் அதிமுக, பாஜக சார்பிலும், வேலூர் நகராட்சியில் திமுக சார்பிலும் திருநங்கை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திருநங்கைகள் சுயேச்சையாகவும் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என … Read more

ஆளுநர்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்புக் கூட்டம்: காங்கிரஸை அழைக்க மம்தா மறுப்பு

கொல்கத்தா: ஆளுநர்களின் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க, பாஜக அல்லாத எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. எந்தவொரு மாநிலக் கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி இணக்கமாக இல்லை. அக்கட்சி தனக்கான பாதையில் தனித்து செயல்படுவதால், எங்களுக்கான பாதையில் நாங்கள் செல்கிறோம். பாஜகவுக்கு எதிராக, … Read more

உலக அளவில் தொடங்கியது 'தாக்கம்'… உக்ரைன் – ரஷ்யா பிரச்சினை வலுத்தது எப்படி? –  ஒரு சமீபத்திய டைம்லைன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மேலும் ஏறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். திடீரென பொருளாதாரத்தில் இத்தனை மாற்றங்கள் நிகழ ஒரே காரணமாகக் கூறப்படுகிறது உக்ரைன் – ரஷ்யா பிரச்சினை. உக்ரைன் – ரஷ்யா பிரச்சினை உருவானது எப்படி? – இதோ ஒரு டைம்லைன் அப்டேட். நேட்டோவில் இணைய எதிர்ப்பு: சோவியத் … Read more

மதுரை: 41-வது முறையாக கரோனா நிதிக்கு ரூ.10,000 வழங்கிய யாசகர்!

மதுரை: மதுரையில் யாசகர் பூல்பாண்டியன் கரோனா பேரிடர் நிதிக்கு, மாவட்ட ஆட்சியருக்கு 41-வது முறையாக 10,000 ரூபாயை நிவாரணமாக வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார். கரோனா தொற்று காலத்தில், தனது சேமிப்பிலிருந்து ரூ.10,000-ஐ பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணமாக வழங்கி வந்தார். தனது சேவை காரணமாக பொதுமக்களால் யாசகர் … Read more

மம்தாவுக்கு மீண்டும் மகத்தான வெற்றி: உள்ளாட்சித் தேர்தலில் திரிணமூல் சாதனை

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் சிலிகுரி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில் 203 இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்த பாஜகவால் 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனைத் தொடர்ந்து … Read more

கனடா: தூதரக பாலம் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

ஒட்டாவா: கனடாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தூதரக பாலம் மீது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கனடாவில் போராட்டங்கள் தொடர்ந்தன. நாட்டின் முக்கிய இடங்களில் கட்டாய தடுப்பூசி … Read more

தி.மலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: வந்தவாசியில் பள்ளிக் கல்வித் துறை ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதியில் பிளஸ் 2 வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது குறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பொன்குமார் இன்று (பிப்.14) ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ‘திருப்புதல் தேர்வு’ நடைபெறுகிறது. இந்நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கான ‘வினாத் தாள்’, சமூக வலைதலங்களில் வெளியாகி, செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதியில் உள்ள … Read more