தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி.தேனி,திண்டுக்கல், கரூர்,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுர், அரியலூர்,கடலூர்,தஞ்சாவூர்திருவாரூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (31-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,கரூர்,திருச்சி.பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டு உள்ளது . சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் … Read more

மத்தியபிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி- 5 பேர் கைது

போபால்: ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறர்கள். போலி ரசீது மூலம் சிலர் மோசடியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வந்ததையடுத்து ஜி.எஸ்.டி. வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர். இந்த போலி நிறுவனங்கள் … Read more

என் ஆடைகளை விற்றாவது விலையை குறைப்பேன்- பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத்: இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:- கைபர் பாக்துன்குவா மாகாண முதலமைச்சர் மம்மூத் கான், 24 மணி நேரத்திற்குள் கோதுமை மாவின் விலையை 400 ரூபாய்க்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நான் எனது ஆடைகளை விற்றாவது குறைந்த … Read more

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்- திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி: சென்னையில் கடந்த 28-ந்தேதி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில வருகிற ஜூன் 3-ந்தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட … Read more

திருப்பூரில் இருந்து 2 மண்ணுளி பாம்புகளை கடத்தி ரூ.10 லட்சத்திற்கு விற்க முயற்சி- 5 பேர் கும்பல் கைது

கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் கோழிக்கோடு வனத்துறை விஜிலன்ஸ் (டி.எப்.ஓ) அதிகாரியான சுனில் குமாருக்கு, ஒரு கும்பல் 2 தலையுள்ள பாம்பினை கடத்தி வந்து கேரளாவில் ஒரு வீட்டில் விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் 5 பேர் கும்பல் இருந்தனர். வனத்துறையினர் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து அவர்களை மடக்கி பிடித்தனர்.மேலும் அந்த வீட்டிலும் … Read more

கப்பல் படைக்கு தலைமையேற்க தேர்வான படுகர் சமுதாய பெண்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (வயது23). ரவீந்திரநாத் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளாா் இதன் காரணமாக இவரது மகள் மீராவை தனது பணி மாறுதல் செல்லும் ஊா்களுக்கு எல்லாம் அழைத்துச்சென்று அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே படிக்க வைத்துள்ளாா். இவா் கோவையில் … Read more

18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?- நக்மா வேதனை

புதுடெல்லி: தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. நடிகை ஜோதிகாவின் அக்காவான இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்று திகழ்ந்தார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையும் நக்மாவுக்கு உண்டு. இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more

லைவ் அப்டேட்ஸ்: ராணுவத்தை நவீனப்படுத்த 8 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கிய ஜெர்மனி

30.5.2022 04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 02.40: ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நகரத்தின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தவறியதற்காக கார்கிவ் பாதுகாப்பு சேவை பிரிவு தலைவரை நீக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீவிரோடோனெட்ஸ் பகுதியில் … Read more

அமெரிக்காவில் ஒரே நாளில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் 1200 விமானங்கள் ரத்து

அட்லாண்டா: அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் விமான பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக அவர்கள் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். வானிலை மோசமாக இருந்தால் விமானங்கள் ரத்து செய்யப்படும். இதனை விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த வாரம் பல விமானங்களை ரத்து செய்தது. அதன்படி அமெரிக்காவில் நேற்று மட்டும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 1500 விமானங்களும், … Read more

9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்கால் திருப்பூரில் ரூ.900 கோடி ஜவுளி துணி உற்பத்தி பாதிப்பு

பல்லடம்: தமிழகத்தில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி தொழில் மூலம் நேரிடையாக சுமார் 10 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 50 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்த விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. உற்பத்தியான துணிக்கு உரிய விலை கிடைக்காதது, தொழிலாளர் பிரச்சினை, வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளால் விசைத்தறி தொழில் ஏற்கனவே நலிவடைந்து உள்ளது. தற்போது விசைத்தறி ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வரும் நூலின் … Read more