பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தெய்வானை என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். இவரை எதிர்த்து யாருமே மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

இந்தியாவில் தினசரி குறையும் பாதிப்பு – மேலும் 1,27,952 கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,27,952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் விகிதம் 7.98 சதவீதமாக உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 4,20,80,664 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 2,30,814 பேர் வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,00,01,228 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1,059 பேர் … Read more

ஒரே நாளில் பல பில்லியன்கள் இழப்பு – அதானி, அம்பானிக்கு அடுத்த இடம் பிடித்தார் மார்க் ஜூகர்பெர்க்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவின் பில்லியனர்களான கெளதம் அதானி, முகேஷ் அம்பானியை விட பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கீழே சென்றுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.  10வது இடத்தில் உள்ள கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 90 பில்லியன் டாலர். 11வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 89 பில்லியன் டாலர். இவர்களுக்கு … Read more

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதையும் படியுங்கள்…அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது: அடுக்கடுக்கான கேள்விகளுடன் முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்

மார்ச் மாதத்தில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வரும்: ராஜேஷ் தோபே

ஜல்னா : நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா 3-வது அலை தலைவிரித்தாடியது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 48 ஆயிரம் பேர் தொற்றால் பதிக்கப்பட்டனர். இருப்பினும் 3-வது அலையின் போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் குறைவாகவே இருந்தது. இதுமட்டும் இன்றி கடந்த சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 15 ஆயிரமாக குறைந்துள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களான … Read more

உக்ரைன் பதற்றத்துக்கு மத்தியில் புதின்-ஜின்பிங் நேரில் சந்திப்பு

பீஜிங் : ரஷியா மற்றும் உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் தற்போது உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சம் படை வீரர்களையும், தளவாடங்களையும் குவித்துள்ளது. இதனால் இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க தயாராகி வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லை என்று ரஷியா மறுத்து வருகிறது. ஆனாலும் அதை நம்பாத அமெரிக்கா … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை  ஆளுநர்  திருப்பி அனுப்பியது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில்,  காலை 11:00 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. முதலமைச்சர் ஸ்டாலின்தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் … Read more

ராமானுஜரின் 216 அடி உயர சிலை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

ஐதராபாத்: ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது.  வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா … Read more

பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு

நாஸ்கா: பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.  தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.  விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக … Read more