அதிர்ச்சி! 5ஆம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து வீசிய ஆசிரியை!!

ஆசிரியை ஒருவர் 5ஆம் வகுப்பு மாணவியை முதல் மாடியில் இருந்து கீழே வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நகர் நிகாம் பகுதியில் பிராத்மிக் வித்யாலயா என்ற பள்ளியில் கீதா தேஷ்வால் என்ற ஆசிரியை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க வகுப்பறைக்கு சென்றுள்ளார். காலை 11 மணி அளவில் ஆசிரியை கீதா பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, வந்தனா என்ற மாணவி வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை … Read more

நாளை மூடப்படும் ரயில்வே கேட் – மாற்றுப்பாதையில் செல்க!!

தென்காசி மாவட்டத்தில் நாளை (18.12.2022) பாவூர்சத்திரம் தென்காசி ரயில்வே கேட் மூடப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக எல்.சி. எண். 83 (பாவூர்சத்திரம் ரயில்வே கேட்) கிலோ மீட்டர் 90/600-700 பாவூர்சத்திரம் தென்காசி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தாமல் மாற்று பாதையில் செல்லுமாறு ரயில்வே துறை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது. திருநெல்வேலி … Read more

வார்டன், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

கல்லூரி விடுதியில் மாணவிக்கு பிரசவம் பார்த்த வார்டன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தலித் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுன் பேளூர் சாலையில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி உள்ளது. இந்த விடுதியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த விடுதியில் தங்கி பியூசி 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான … Read more

சென்னை மக்களே, நாளை இங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. மினி மாரத்தான் போட்டியை முன்னிட்டு நாளை (டிச.18-ம் தேதி) காலை 4 மணி முதல் 8 மணி வரை அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, திரு.வி.க பாலத்தில் இருந்து 3வது அவென்யூ மற்றும் 2வது அவென்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்களும் எம்எல் … Read more

சவுக்கு சங்கருக்கு விதித்த நிபந்தனைகள் தளர்வு: ஐகோர்ட் கிளை உத்தரவு..!

கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது. இதைடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், சிறையில் … Read more

சீர்காழி அருகே சோகம்.. உறங்கிய மூதாட்டி சுவர் விழுந்து பலி..!

சீர்காழி அருகே, மழையால் ஏற்பட்ட பாதிப்பில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டி உடல் நசுங்கி உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்கா தெருவில் கூரை வீட்டில் வசித்தவர் ருக்மணி(80). சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இவரது கூரை வீட்டின் சுவர் சேதமடைந்து இருந்தது. இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு ருக்மணி வீட்டில் உள்ள கட்டிலில் உறங்கியுள்ளார். இன்று அதிகாலை, சேதம் அடைந்திருந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர் முழுவதுமாக இடிந்து வீட்டின் … Read more

நடிகை குஷ்புவின் சகோதரர் காலமானார்..!

பிரபல திரைப்பட நடிகை குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ்த் திரையுலகில் 80 மற்றும் 90-களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள குஷ்பு, நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். குஷ்பு சமீபத்தில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்த … Read more

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகம் ழுழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 6, 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து … Read more

சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடக்கூடாது: ஆவடி கமிஷனர் அதிரடி உத்தரவு..!

பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது. சமூக வலைதளங்களில் யாரும் தேவை இல்லாமல் கருத்து பதிவிட வேண்டாம் என ஆவடி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரம் அருகே பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதற்கும், வாகனங்களை கண்காணிப்பதற்கும் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர், அங்கிருந்த போலீசார் மத்தியில் பேசியதாவது; … Read more

நெய்யை அடுத்து வெண்ணெய்.. அதிரடியாக விலை உயர்த்தியது ஆவின்..!

ஆவின் பால், நெய் விலையை தொடர்ந்த தற்போது சமையல் பயன்பாட்டிற்கான வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெய்யின் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி ஆவின் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, 15 லிட்டர் நெய் (டின்)- ரூ.10 ஆயிரத்து 725 (பழைய விலை ரூ.9,680); பிரீமியம் நெய் 1 லிட்டர்- ரூ.680 … Read more