உதயநிதி மகனுக்கும் பதவி? அமைச்சர்கள் ஆதரவு!

உதயநிதி மட்டுமல்ல.. அவரது மகன் இன்பநிதி வந்தாலும் வாழ்கனு தான் சொல்லுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடியதா என கேள்வி எழுப்பினார்.   உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது, வாரிசு அரசியல் அல்ல என்று நேரு தெரிவித்தார். அதே சமயம் திமுகவை கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய … Read more

“இது நேருவின் இந்தியா அல்ல” – ராகுல்காந்திக்கு பாஜக பதிலடி

இது நேருவின் இந்தியா அல்ல என்று சீனாவுடனான போர் குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாதயாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல்காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, சீனா முழு … Read more

சென்டர் மீடியனில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது: 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்..!

தெலுங்கானாவில், தடுப்புச்சுவரில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் கார் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். … Read more

ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கு வேலை: அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை..!

தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி மூலம் 2023-ல் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நான்காம் தொகுதி தேர்வுகள் தவிர்த்து, ஒராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டும்தான் நிரப்பப்பட … Read more

முதுமலையில் பெண் புலி உயிரிழப்பு…என்ன காரணம்?

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 11 வயது பெண் புலி ஒன்று உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம், 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இது தவிர முகாம்களில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 11 வயது பெண் புலி சேற்றில் சிக்கி இறந்த கிடந்தது. இதை … Read more

குழந்தைத் திருமணங்களை தடுக்க எவ்வாறு புகார் செய்வது தெரியுமா ?

சமீப காலங்களில் குழந்தைத் திருமணங்கள் நடப்பது குறைந்து வந்தாலும்கூட, கிராமப்புறங்களிலும், மிகவும் வறுமையில் வாடும் மக்களிடையேயும் இது பரவலாக உள்ளது. குழந்தைத் திருமணத் தடுப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக செயல்படுத்தி வந்தாலும், சில சமூகங்களில் இந்த நடைமுறை இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறது. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையை மீட்டுத் தருவது அரசின் கடமை மட்டுமில்லை, சமூகத்தில் இருக்கும் நமது அனைவரின் கடமையாகும். எனவே உங்கள் பகுதியில் குழந்தைத் திருமணம் நடைபெற்றால், … Read more

போருக்கு தயாராகும் சீனா…தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியா.. ராகுல் காட்டம்!

சீனா போருக்கு தயாராவதாகவும், இந்திய அரசு தூங்கிக்கொண்டிருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல்காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அருணாச்சலபிரதேச எல்லையில் சீன படைகள் ஊடுருவ முயற்சித்தது, இந்திய-சீன படைகள் மோதிக்கொண்ட சம்பவம் … Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?..

ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று மத்திய அரசு உறுதிப்பட தெரிவித்துள்ளது. தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் … Read more

புதினுடன் பேசிய மோடி….அமெரிக்கா வரவேற்பு!…என்ன நடந்தது?

உக்ரைன் மீதான ரஷிய போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வரவேற்றுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்திருக்கிறது. மேற்கு நாடுகள் உட்பட சர்வதேசளவில் பெரும் எதிர்ப்பை ரஷ்யா சம்பாதித்திருப்பதன் மத்தியில், ரஷியாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இது தொடர்பாக உக்ரைன் தேசம் அதிகாரபூர்வமாக தனது ஆட்சேபத்தை பதிவு செய்தபோதும், இந்தியா தனது முடிவிலிருந்து மாறவில்லை. அதேபோல உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிராக இந்தியா … Read more

சோகம்…!தடுப்புச்சுவரில் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு!..

தெலுங்கானா மாநிலத்தில் கார் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். தெலுங்கானாவின் நல்கொண்டாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தழைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் இறந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ஓட்டுநர் பானி குமார் எனவும் அவரது தாயார் கருணா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். … Read more