இந்து நாடாக மாறும் அபாயத்தில் இந்தியா: அமெரிக்க எம்பி பேச்சு..!

மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியா, தற்போது ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது என்று, அமெரிக்க எம்பி ஆண்டி லெவின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், மிச்சிகன் மாகாணம் சார்பில் கடந்த 2019 முதல் ஜனநாயக கட்சியின் எம்பியாக இருந்த லெவின், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் பிரதிநிதிகள் சபையில் அவர் ஆற்றிய உரையில், “அமெரிக்கா மனித உரிமைகளை காப்பாற்றுவதில் அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும், பல பகுதிகளில் … Read more

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை..!

20 ஆண்டு காலமாக போராடி வரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021-ம் ஆண்டுச் சட்டமன்ற தேர்தலின் போது, ‘ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. … Read more

ஆசிரியரை அடித்து, உதைத்த மாணவிகள்!! பரபரப்பு வீடியோ

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியில் தலைமை வார்டனாக பணியாற்றிவரும் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அவ்வபோது மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்ந மாணவிகள் பொங்கி எழுந்து கம்பு, கட்டைகள் உள்ளிட்டவைகளால் கொண்டு அவரை சரமாறியாக தாக்கினர். தகவல் அறிந்து … Read more

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் வரும் 20-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (16-ம் தேதி) முதல் வரும் 18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19-ம் … Read more

வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை வரவேற்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக, முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து, கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில், நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் … Read more

அதிமுக கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் பலி.. 2 பேர் கைது..!

மதுராந்தகம் அருகே, அதிமுக கொடி கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் நெடுஞ்சாலையோரத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 100 அடி உயரம் கொண்ட அதிமுக கம்பத்தில் கொடி ஏற்றி வைத்திருந்தார். அந்த கொடி கம்பம் சேதம் அடைந்திருந்தது. அதை மாற்ற நேற்று ராட்சத கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை கழற்றி மீண்டும் பொருத்தும் பணி … Read more

பாலைத் தொடர்ந்து நெய்.. மக்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆவின்..!

தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் விலை ஏற்கெனவே உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெய்யின் விலையும் லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவின் நெய் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் நெய் 580 ரூபாயில் இருந்து 630 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், 5 லிட்டர் நெய் 2,900 ரூபாயில் இருந்து, … Read more

பக்தர்களுக்கு நற்செய்தி.. சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் குறைப்பு..!

இன்று மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிவன் மற்றும் வைணவ கோவில்களில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. அதன்படி, பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் … Read more

பெருமாள் கோயிலை காணோம்.. போலீசில் பொன்.மாணிக்கவேல் புகார்..!

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த கிபி 1071-ம் வருட பழமையான நின்று அருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலை காணவில்லை என்று, பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் புகார் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “காஞ்சிபுரம் அருகே ஒரு பெருமாள் கோயில் களவாடப்பட்டு நம் மண்ணில் இருந்தே காணாமல் போயுள்ளது. பரந்தகத் தேவர் என்ற சோழர் காலத்தில் 1071-ம் ஆண்டு கட்டப்பட்ட நின்று … Read more

இனி, ஆதார் மூலம் ரேஷன் வாங்கலாம்.. மத்திய அமைச்சர் தகவல்..!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: “ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைத்து பயனாளர்களும் தங்களுக்கான … Read more