இவர் தான் உலகிலேயே மிகவும் குள்ள மனிதர்..!!

உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ஏற்கனவே கொலம்பியாவைச் சேர்ந்த Edward ‘Niño’ Hernandez (36) என்னும் நபர் இடம் பிடித்திருந்தார். அவரை விட ஆப்சின் (Afshin) 7 சென்டி மீட்டர் உயரம் குறைந்தவர் என்பதால், தற்போது இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அவரது உயரம் 2அடி ஒரு அங்குலம், அதாவது 65.24 சென்டி மீட்டர். 20 வயதாகும், ஆப்சின் இஸ்மாயில் ஈரானிலுள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..!!

ஈரோட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் இன்று நடந்தது. விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், “புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. இப்பொழுது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு … Read more

அன்னூர், மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது.. தமிழக அரசு திட்டவட்டம்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக … Read more

மக்களே இனிமேல் இந்த திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA)-க்கு துணை அங்கீகார பயனர் … Read more

டெல்லி கொடூர கொலையாளி ஜாமின் கோரி மனு!….

டெல்லியில் லிவ் இன் காதலி ஷரத்தா கொலை வழக்கில் கொடூர காதலன் அப்தாப் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலன் அப்தாப் அமீன் என்பவரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அப்தாப் அமீன், ஷரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்தாப் அமீன், ஷரத்தாவின் உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின்னர் கொஞ்சமாக, கொஞ்சமாக உடல் பகுதியை அகற்றினார். இந்த … Read more

4 கால்களுடன் பிறந்த குழந்தை – மருத்துவர்கள் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில் 4 கால்களுடன் பிறந்த குழந்தையால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி என்னவென்றால் குழந்தை மொத்தம் 4 கால்களுடன் பிறந்துள்ளது. அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் … Read more

ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்.!

ஆவின் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்தி இருப்பதற்கு பாஜக வன்மையாக கண்டிப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு என்று சாடியுள்ளார். இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் … Read more

சீக்கியர்கள் கொலை!…43 காவலர்களுக்கு 7 ஆண்டு சிறை!

சீக்கியர்கள் கொலை வழக்கில் 43 காவலர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை காவலர்கள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47 போலீசாருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் இடைப்பட்ட காலத்தில் 3 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த தண்டனைக்கு … Read more

பண மோசடி வழக்கு -நடிகை ரகுல் பிரீத்சிங்கிற்கு சம்மன்!

போதைப் பொருள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ரகுல் பிரீத்சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பெங்களூருவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் தெலுங்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி, … Read more

சின்னவர் அல்ல, சின்ன கலைஞர்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு..!

என்னைப் பொருத்தவரை, உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்பதைவிட சின்ன கலைஞர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று, அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 14-ம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் எந்தக் காலத்திலும் முதலமைச்சராக முடியாது. அவர் ஜாதகத்திலேயே அந்த அம்சம் இல்லை என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் சிலர் … Read more