இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்… 263 ரன்னில் ஆல் அவுட்

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கை மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, டேவிட் வார்னர் விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக, மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  நேற்று நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில்,.  ஆஸி அணி. 263 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. ஏற்கனவே  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் … Read more

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை…

சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக கூறினார். கிரெடாய் சென்னை சார்பில் தென்னிந்தியாவின் பிரம்மாண்ட சொத்து கண்காட்சியின் 15வது பதிப்பான ‘ஃபேர்பஃரோ 2023’ சென்னை நந்தம்பாக்கத்தில், கிரெடாய் அமைப்பின் சார்பில்  தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொலை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த ரியல் எஸ்டேட் … Read more

பணி நிறைவு பெறாத வீடு, தொழிற்சாலைகளுக்கு மின்இணைப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: பணி நிறைவு பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்றிதழ் பெறுவது அவசியம். அதாவது, பொது கட்டிட விதிகள் தொடர்பாக புதிய சட்டம் 2019-ல் அமலுக்கு வந்தது. பணி நிறைவு சான்று: அதன்படி, … Read more

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

சென்னை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதன்படி வரும் (பிப்.20) 20ந்தேதி  தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இல்லம்தேடி கல்வி  திட்டத்தின் சிறப்புபணி அலுவலர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா பரவலால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை … Read more

துருக்கி சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படை நாடு திரும்பியது…

டெல்லி: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்புபணிக்கு சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு படையினர், 11 நாட்களுக்கு பிறகு தாயகம் திரும்பினர். பிப்ரவரி 6-ம் தேதி துருக்கியின் தெற்கு, மத்திய பகுதிகள் மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவுகோலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்  ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கியது.  இந்த நிலநடுக்ம் காரணமாக, துருக்கியில் 38,000 பேர், சிரியாவில் 6,000 பேர் என இதுவரை 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். பூகப்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை … Read more

சென்னையில் 96 உள்பட 254 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்! தெற்கு ரயில்வே

சென்னை:  மாநில தலைநகர் சென்னையில் 96 உள்பட மாநிலம் முழுவதும் 254 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் கிஆர் கோடு வசதியுடன், பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவ இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. கடைசி நேர பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில்,  முன் பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளை சுலபமாக பெற ரயில்வே, தானியங்கி விற்பனை டிக்கெட் இயந்திரங்களை நிறுவி வருகிறது. தற்போது சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றிரண்டு, டிக்கெட் விற்பனை எந்திரங்கள் ‘‘கியூ … Read more

குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் 5அடுக்கு பாதுகாப்பு – இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்

கோவை: குடியரசுதலைவர் திரவுபதி முர்மு இன்று முதன்முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார். இன்று மதியம் மதுரைக்கு வரும் முர்மு, மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார். தொடர்ந்து, கோவை செல்பவர் அங்கு இரவு ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி மதுரை, கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், கோவையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, கோவையில் இன்றும், நாளையும் (பிப்.18, 19) போக்குவரத்து … Read more

மீனவர் மரணம்: கர்நாடக வனத்துறைக்கு கண்டனம் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் மரணித்ததாக கூறப்படும் ராஜாவின் மறைவுக்கு இரங்கலையும், 5 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தம்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் கடந்த செவ்வாய் அன்று இரவு மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளபாலாற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கிருந்து ரவி, இளையபெருமாள் ஆகியோர் … Read more

ஆளுங்கட்சி திமுகவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும்….

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளுங்கட்சி திமுகவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும்…. கொங்கு மண்டலத்தின் வலிமையான தலைவராக உருவெடுத்துவரும் செந்தில்பாலாஜிக்கு, இந்த இடத்தில் திமுகவை வரலாறு காணாத அளவிற்கு வெற்றி பெறச்செய்து அதன் மூலம் எஞ்சிருயிக்கும் சீனியர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறலாம் என்பது கணக்கு. கொங்கு மண்டல அசைன்மென்ட் தமிழக முழுவதும் கிடைக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருக்கலாம். அதைவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை … Read more

காதுல பூ : பாஜக மக்கள் காதுகளில் பூ சுற்றுகிறது… பட்ஜெட் கூட்டத்துக்கு காதில் பூவுடன் வந்த காங்கிரஸ் தலைவர்கள்

2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமைய்யா தனது காதுகளில் காவி நிற சாமந்தி பூவை வைத்திருந்தார். காலை 10.15 மணிக்கு பசவராஜ பொம்மை தனது பட்ஜெட் உரையை தொடங்கிய போது, ​​ ‘பொம்மை மாநில … Read more