சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை இன்று கூடுகிறது.

இலங்கைக்கான கடன் வசதியை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை இன்று கூடுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் நாளை காலை அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இந்த கடன் வசதியை வழங்குவது தொடர்பான, நிதியத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி முதல், இலங்கைக்கு 8 … Read more

இராணுவத்தினரால் முல்லைத்தீவு ,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடுகள்

இராணுவத்தினரால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடுகள் நிர்மாணிப்புஅண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளின் சாவிகள் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 64வது காலாட் படைப் பிரிவின் 643வது காலாட் பிரிகேடின் படையினரால் முட்டியங்காட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த திருமதி ஜே. அன்டோனிதாஸின் குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது இலங்கை பீரங்கி படையினர் தங்களுடைய தொழில்நுட்பம் … Read more

தமது நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு இலங்கை இராணுவம் வழங்கும் பயிற்சி வசதிகளை மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார்.

இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார். இலங்கை தமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உயர்தர மற்றும் தரமான பயிற்சிகளை வழங்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். அதேபோன்று மாலைதீவு மக்கள் அவர்களின் பல்வேறு தேவைகளுக்காக இலங்கைக்கு வரும் சந்தர்பங்களில் இலங்கை அதிகாரிகளினால் அவர்களுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புக்காக உயர்ஸ்தானிகர் பாயிஸ் தனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் … Read more

இத்தாலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவர் அதிமேதகு ரிடா ஜூலியானா மன்னெல்லா இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில்  (மார்ச் 15) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இத்தாலிய தூதுவர் தலைமையிலான குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இவர்களுக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜெனரல் குணரத்னவுக்கும் தூதுவர் மன்னெல்லாவுக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு … Read more

பனாகொடை மேற்குப் படையினருக்கு இராணுவத் தளபதி உரை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் செவ்வாய் (14) மாலை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளின் படையினர்களுக்கு உரையாற்றினார். பனாகொடை இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் இது இடம்பெற்றது. உரையின் போது, இராணுவத் தளபதி, ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இராணுவத்தின் செயல்திறனின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தற்போதைய செயற்பாட்டுச் சூழல் முன்வைத்துள்ள சவால்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார். பயிற்சி, திட்டமிடல் மற்றும் முன்னறிவிப்பு … Read more

கொமாண்டோ படையணியின் 350 சிப்பாய்கள் தேசத்தின் பணிக்காக

இராணுவத்தின் கொமாண்டோ படையணியில் நடைபெற்ற ஒரு விழாவின் போது அவர்களின் புதிய 265 ‘கபில தொப்பிகள்’ மற்றும் 85 ‘நீண்ட இலக்கு ரோந்து ‘ வீரர்களின் விடுகை அணிவகுப்பு புதன்கிழமை (மார்ச் 15) குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது. கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த … Read more

2026 ஆம் ஆண்டு – பிஃபா உலகக் கிண்ண போட்டிகள்

2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 64இல் இருந்து 104ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்தும் போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளின் எண்ணிக்கை 32 இல் இருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான்கு அணிகளைக் கொண்ட 12 குழுக்களில் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் புதிதாக 32 அணிகள் கொண்ட சுற்று ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை … Read more

மலாவி நாட்டில் பிரெட்டி சூறாவளி புயல், உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயல் தாக்கியதால், தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மலாவியின் ‘தெற்கு மலாவியில் பெரு வெள்ளம் ஏற்படும். சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது’ என்று அந்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால்  உயிரிந்தோரின்  எண்ணிக்கை 326-ஐ தாண்டியுள்ளதாகவும், நூற்றுக் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்து உள்ளதாகவும், பல … Read more

உளுந்து உற்பத்தி: வவுனியா விவசாயத் திணைக்களத்தால் விசேட வேலைத்திட்டம்

வவுனியாவில் விதை உளுந்து சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 125,000 கிலோ உளுந்து விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு விதைப்புக்கு ஏற்ற விதைகளாக விற்பனை செய்யப்பட்டுவருவதாக வவுனியா விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் த.யோகேஸ்வரன்  (17) தெரிவித்துள்ளார். சந்தையில் உளுந்திற்கு அதிக கேள்வி காணப்படுகின்றது. இதுவரை விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வவுனியா மாவட்ட விவசாயிகளிடமிருந்து 125,000 கிலோ உளுந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து தலா 900 ரூபாய்க்கு கொள்முதல் … Read more

இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய அலுவலக வளாகம்

இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் தொகுதியானது இன்று பிற்பகல் (14) பனாகொடை இராணுவ வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கபட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களும் கலந்து கொண்டு புதிய வசதிகளைக் கொண்ட கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இராணுவத்தின் விவசாயம் மற்றும் … Read more