சைதை துரைசாமியின் மறுபக்கம்

அண்ணா தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கியதற்கு விதை போட்டவர்களில் சைதை துரைசாமியும் ஒருவர். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான சைதை துரைசாமி ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டவர். ஆனாலும் அவர் எப்படி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெருநகர சென்னைக்கு மேயராக மாறினார்..? Source link

நிவாரண நிதியில் பிரதமர் மோடியை துவைத்தெடுக்கும் ஸ்டாலின், தட்டிக் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பட்டும் படாமலும் விமர்சனம் செய்திருக்கிறார். Source … Read more

குஜராத்தில் மீண்டும் மீண்டும் பிடிபடும் போதை பொருட்கள்

குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோர காவல்படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் பாகிஸ்தானியர்கள் கைதாகினர். Source link

ராமர் என்றாலே ராகுலுக்கு வெறுப்பு… மத மோதலைத் தூண்டும் மத்திய அமைச்சர் முருகன்

அயோத்தி சென்ற ராகுல் ராமர் கோயிலுக்கு செல்லாதது அவர் இந்துக்களை வெறுக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பது மத மோதலை தூண்டும் விதமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி எழுப்பியிருக்கின்றனர். Source link

காவிரி நீரையும் கொள்ளையடிக்கிறார் விஜயபாஸ்கர்… அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை

புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை தடுத்து விஜயபாஸ்கர் அவரது கல்லூரிக்கும் அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். இனியும் இதை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். Source link

இதுக்கெல்லாம் பணம் வாங்கலாமா..? கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி

எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். Source link

ஒருவழியா விஜயகாந்துக்கு பதமபூஷன் கிடைக்கப்போகுது

விஜயகாந்த் மறைவுக்குப்பிறகு அவரை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கியது. தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரவில்லை. இதனால், கடந்த வாரம் நடந்த விழாவில் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷண் விருது வழங்கப்படாதது சர்ச்சையாக மாறியது. Source link

செஸ் வீரர் குகேஷ்க்கு ஊக்கப்பரிசு வழங்கி சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்

கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். Source link

ஜெயலலிதாவுக்கு கொடநாடு… ஸ்டாலினுக்கு கொடைக்கானல்

கோடை விடுமுறையில் ஒவ்வொரு தலைவர்களும் குளுகுளு பிரதேசத்துக்கு ஓடிப் போய் ஒதுங்குவார்கள். ஜெயலலிதாவுக்கு கொடநாடு என்றால் ஸ்டாலினுக்கு கொடைக்கானல். இதற்குப் பின்னே இருக்கிறதாம் ஒரு சென்டிமென்ட் விவகாரம் Source link

குஜராத்தில் மெகா போதை ஃபேக்டரி… நாடு முழுக்க சப்ளை

குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் இயங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விவகாரத்தில் தி.மு.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறிவரும் பா.ஜ.க.வினர் இதுகுறித்து வாயையே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Source link