Kacha Badam: வேர்கடலை வியாபாரி டு வைரல் பாடகர் பூபன் பத்யாகரின் கதை தெரியுமா?

`மேற்கு வங்க மாநிலத்தில் குரல்ஜூரி என்னும் கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வருபவர் தான் இந்த ‘பூபன் பத்யாகர்’. எப்போதும் பாடல் பாடிக்கொண்டே வேர்க்கடலை விற்று வருவதுதான் இவரது இயல்பு. அவ்வாறு வேர்க்கடலை விற்றுக்கொண்டே ‘கச்சா பாதாம்’ என்று வாயில் முணுமுணுத்த படி இவர் பாடிய பாடலுக்கு ரசிகரான அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், கடலை விற்றுக்கொண்டே பாடல் பாடும் பூபன் பத்யாகரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதற்குப்பின் அவரது கிராம மக்கள் … Read more

`இந்தியர்களே… உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்!' – இந்திய தூதரகம் அறிவுரை

ரஷ்யாவும் உக்ரைனும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள். ஏற்கெனவே இரு நாடுகளுக்கு மத்தியில் மோதல் போக்கு நிலவிவந்தாலும், எப்போது உக்ரைன் அமெரிக்காவின் நேட்டா வில் இணைய முடிவு செய்ததோ அப்போதிலிருந்து பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. … Read more

“ரஷ்யா எங்கள் மீது நாளை போர் தொடுக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது!" – உக்ரைன் அதிபர்

உக்ரைன் எல்லையில் கடந்த சில நாள்களாகவே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதனால், இந்த விவகாரம் உலக அளவில் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது முகநூல் பக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா மீது நாளை (பிப்.16) தாக்குதல் நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைக்கு அருகில் ரஷ்ய ராணுவம் சுமார் ஒரு லட்சம் தரைப்படைகளையும், போர் தளவாடங்களையும் … Read more

`டெட்’ தேர்வுடன் `நீட்’ தேர்வை அண்ணாமலை ஒப்பிடுவது சரியா?! – ஓர் அலசல்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தில், தமிழக தி.மு.க அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வையும், ஆசிரியர் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் ‘டெட்’ தேர்வையும் ஒப்பிட்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். டெட் தேர்வு “ஆசிரியர் பணிக்கு பி.எட் தேர்வு மதிப்பெண் இருந்தும், ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் … Read more

ஊர்ப்புறப் பாட்டால் உயரம் தொட்ட படம்! #My Vikatan

தன் காதலியின் கணவனைக் காப்பாற்றத் தன் இன்னுயிரையே ஈன்ற நாயகனைக் கண்டது நம் தமிழ்த் திரையுலகம். அது ‘நெஞ்சில் ஓர் ஆலய’மாக இன்று வரை நின்று நிலைக்கிறது. அதைப்போலவே தான் காதலித்த ஆணுக்காக ஒரு பெண் தன் பிராணனை விட்ட கதையும் உண்டு.  அதுதான் 44 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘அன்னக்கிளி’. 1976-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் முதல்முறையாக இசையமைத்த ‘ராசய்யா’ இன்று இசைஞானியாக வளர்ந்து, இமயமென உயர்ந்து நிற்கிறார். … Read more

ஆளுநர்களுக்கு எதிரான தேசிய இயக்கம்; முன்னெடுக்கும் மம்தா, ஸ்டாலின்?! -அதன் தாக்கம் எப்படியிருக்கும்?

மேற்குவங்க முதல்வர் மம்தா பானார்ஜிக்கும், அந்த மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே நீண்ட நாள்களாக உரசல்கள் இருந்துவருகின்றன. இந்த நிலையில், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அரசியலமைப்புச் சட்டத்தின் 174-வது பிரிவு தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிப்ரவரி 12-ம் தேதி முதல் மேற்குவங்க சட்டசபையை முடக்குவதாக உத்தரவிட்டார். ஜக்தீப் தன்கரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பியது. இதையடுத்து, மேற்குவங்க ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். … Read more

இன்றைய ராசி பலன் | 15/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

“ஓட்டு கேட்கும் நாங்களும் பிச்சைக்காரர்கள் தான்" – அமைச்சர் நாசர் கலகல!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ஒருபுறம் கட்டுக்கோப்பாக நடத்தி வர, இன்னொருபுறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். நாள்தோறும் விதவிதமான முறையில் ஓட்டு கேட்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துவருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் “பிச்சைக்காரன் ரெண்டு வகை, காசு கேட்டு ஒருத்தன் … Read more

நீட் உதயமாக காங்கிரஸ் – திமுக காரணமா? – அதிமுக-வின் தொடர் குற்றச்சாட்டும்… எதிர்தரப்பு விளக்கமும்!

“நீட் தேர்வை ரத்துசெய்வதற்குக் கடுமையான முயற்சி மேற்கொண்டோம். இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடத்தவேண்டிய சூழ்நிலையில் அப்போது அ.தி.மு.க இருந்தது. இப்போதும் நீட் தேர்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்று நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் தி.மு.க-வும்தான் காரணம்.” என அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி வருகிறார்கள். “2010-ல் மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன் இருந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. … Read more

`குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் விண்ணப்பம் உண்மையா… போலியா?' – அன்புமணி ட்வீட்

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை. … Read more