ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி!

ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. அவருக்கு ஆதரவாக 48 வாக்குகள் கிடைத்தது. எதிர்க்கட்சிகள் வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியுள்ளது. இந்த ஒரு நாள் சிறப்பு அமர்வில், முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்யவிருந்தார். சத்தீஸ்கரில் இருந்து காங்கிரஸ் மற்றும் … Read more

ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

ரஷ்ய தொழிலதிபர்கள் மரணத்தில் மர்மம்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இரு நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து, ரஷ்யாவின் குறைந்தது 8 முக்கிய ரஷ்ய  தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள்  மர்மமான சூழ்நிலையில் இறந்துள்ளனர். தொழிலதிபர்களின் மரணம் இந்த அனைத்து தொழிலதிபர்களின் மரணத்திற்கும் பொதுவான தொடர்பு உள்ளதா என்பது குறித்து ரஷ்யாவில் இருந்து மேற்கத்திய … Read more

பேருந்தில் பெண் குழந்தையை விட்டு சென்ற பெண்

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிசெல்ல தயாராக இருந்தது. அப்போது, அங்கு பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு இளமண பெண் சுமார் 2 வயது மதிக்கதக்க பெண்குழந்தையுடன் முன்பக்கமாக பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் இவர் தனது 2 வயது குழந்தையை பேருந்தில் தனியாக விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றுவிட்டார்.  இந்த சூழலில் பேருந்து பயணிகளுடன் புறப்பட … Read more

ரஷ்ய தூதரகத்தை குறிவைத்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்பு!

ஆப்கானிஸ்தான் செய்திகள்: ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரக வாயிலில் இன்று (திங்கள்கிழமை) தற்கொலை படை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, ​​தூதரக ஊழியர்கள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது தூதரகம் முன்பு விசாவிற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்: காபூலில் உள்ள ரஷ்ய … Read more

விஜய், அஜித்துக்கே இல்லை..ஆனா உதயநிதிக்கு கிடைத்த பெருமை!

திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாறு கடைக்கோடி கிராமங்கள் வரை இல்லாதது வருத்தமளிப்பதாகவும், தலைமைக்கும் தொண்டனுக்கும் இடைவெளியே இருக்க கூடாது என்றும், அதை நிரப்பி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியின் நேர்மையான தலைவராக மு.க.ஸ்டாலினின் லட்சியத்தை நோக்கிய பயணம் அது.!  அதனை செயல்படுத்த திமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாற்றைத் தமிழகம் முழுவதும் எடுத்துரைக்கும் பணியில் அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கழகத்தின் … Read more

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்று சிறப்பித்தார். அப்போது ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை என முதலமைச்சர் ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் பாராட்டியுள்ளார். அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு, … Read more

சைரஸ் மிஸ்திரி சாலை விபத்து: ட்வீட் மூலம் உறுதிமொழி எடுத்த ஆனந்த மகிந்திரா

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று ஒரு சாலை விபத்தில் உயிர் இழந்தார். அவர் உயிரிழக்க காரணமாக இருந்த கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்று “நாம் அனைவரும் நமது குடும்பங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்” என்று உறுதிமொழியை பதிவிட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி பின் இருக்கையில் இருந்ததாகவும், அப்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனந்த மகிந்திராவின் ட்வீட்டும் இந்த செய்தியின் மீது … Read more

ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்: புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 18- ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், ‘அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களது … Read more

சினம் படம் திரையரங்கில் தான் வர வேண்டும் என உறுதியாக இருந்தேன் – அருண் விஜய்!

Movie Slides Pvt. Ltd  சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில்,  இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம்“சினம். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா ஞாயிற்றுக்கிழமை கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர்.  இவ்விழாவினில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி கூறியதாவது, “படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு … Read more

காற்று மாசு: டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம்!

சஸ்டைனபிள் மொபிலிட்டி நெட்வொர்க் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட சி.எம்.எஸ்.ஆர் எனும் ஆலோசனைக் குழு அண்மையில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இக்கணக்கெடுப்பின் முடிவானது காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் என்கின்ற கோரிக்கை சென்னை மக்களிடம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும் மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் … Read more