வானில் இன்று ஒரே நேரத்தில் நிகழும் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம்

வானில் இன்று ஒரே நேரத்தில் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம் என்னும் இரண்டு அரிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இவற்றை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணம் சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 26ஆம் தேதி) பவுர்ணமி நாளன்று நிகழவுள்ளது. மூன்று வகையான சந்திர கிரகணங்கள் … Read more

ஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பிறர் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரித்துப் பயன்படுத்தும் வகையில், புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிரபல குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், புதிய வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் … Read more

ஜியோபோன் நெக்ஸ்ட்; மலிவு விலையில் ஒரு ஸ்மார்ட்போன்: கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் அறிமுகம்

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டே இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இன்று காலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெடின் 44வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ குழு ஒரு ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கியுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள உள்ள இந்த ஃபோனை … Read more

குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க 8 வாரங்கள் தேவை: நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து ட்விட்டர் பதில்

முழு நேரக் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கத் தங்களுக்கு 8 வாரங்கள் தேவை என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, 2 நாட்களில் ட்விட்டர் நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், புதிய விதிகளின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. அதற்கு ட்விட்டர் … Read more

ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் போனஸ்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

பெருந்தொற்றுக் கால ஊக்கத்தொகையாக ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் வழங்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட்டில் பகுதி நேர, மணி நேரக் கணக்கில் பணிபுரிவோர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. கரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சார் துறைகள் முன்னெப்போதையும் விடத் தொய்வின்றி இயங்கி வருகின்றன. அவற்றுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டில் 1,75,508 ஊழியர்கள் … Read more

ஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்கும் ட்விட்டர்

பயனர்களிடம் கிடைத்த மிகச் சுமாரான வரவேற்பைத் தொடர்ந்து ஃப்ளீட்ஸ் வசதியை ட்விட்டர் நிறுவனம் ஆகஸ்ட் 3 முதல் நீக்கவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஃப்ளீட்ஸ் என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ட்வீட் செய்வது மட்டுமல்லாமல், 24 மணி நேரம் மட்டுமே தோன்றும் ட்வீட்டுகளை/ தகவல்களை/ இணைப்புகளை இதில் பகிரலாம். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் ஸ்டோரி/ ஸ்டேட்டஸ் வசதிக்கு இணையாக இது அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், வெர்டிகல் வடிவில் பகிர்வு, … Read more

குறிவைத்து துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்த புதிய வசதி: இன்ஸ்டாகிராம் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் தளத்தில் தனி நபர்களைக் குறிவைத்துத் துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் லிமிட்ஸ் என்கிற புதிய வசதியை அந்தத் தளம் அறிமுகம் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் தனி நபர்களின் கணக்குகளில் ஆபாசமாகக் கருத்துப் பதிவிடுவது, பிரபலமானவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவது எனப் பல பிரச்சினைகள் தொடர்கின்றன. இப்படியான ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு சமூக வலைதளமும் பல்வேறு கட்டுப்பாடுகளை, வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளத்தில், லிமிட்ஸ் என்கிற புதிய அம்சத்தின் மூலம், … Read more

அடிப்படை 4ஜி மொபைல் மாடலை அறிமுகம் செய்த நோக்கியா

நோக்கியா மொபைல் போன்களைத் தயாரிக்கும் ஹெச் எம் டி குளோபல் நிறுவனம், புதிய அடிப்படை வசதிகள் கொண்ட 4ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 110 4ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் விலை ரூ.2,799. ஜூலை 24 முதல், மஞ்சள், ஆக்வா, கருப்பு ஆகிய நிறங்களில் அமேசான் இணையதளத்திலும், நோக்கியாவின் தளத்திலும் இந்த மொபைல்கள் கிடைக்கும். எஃப் எம் ரேடியோவை ஹெட்செட் இல்லாமல் கேட்கும் வசதி, எம்பி3 ப்ளேயர், 32 ஜிபி வரை மெமரி … Read more

ஒருமுறை பார்த்த பிறகு மறையும் புதிய வசதி: வாட்ஸ் அப் அறிமுகம்

புகைப்படங்கள், வீடியோக்களை ஒருமுறை பார்த்த பிறகு மறைந்து போகும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. வியூ ஒன்ஸ் (view once) என்ற பெயர் கொண்டிருக்கும் இந்த அம்சம் ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில தளங்களில் உள்ளன. சோதனைக் கட்டத்தில் இருந்த இந்த வசதியை புதன்கிழமை அன்று அதிகாரபூர்வமாக அத்தனை வாட்ஸ் அப் பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். வழக்கமாக புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பும் முறையில் எந்தவித மாறுதலும் இல்லை. கூடுதலாக, புகைப்படங்கள், வீடியோக்களுக்குக் கீழே … Read more

பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இளம்பெண்களின் மனநிலையை பாதிப்பதாக ஃபேஸ்புக் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறைகளிடத்தில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதைப் பயன்படுத்துபவர்களில் 40%க்கும் மேலானோர் 20 வயதுக்குக் குறைவானவர்கள். இந்த நிலையில் சமீபத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள்தான் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த கேள்வியை அதிகரித்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் இளம்பெண்கள் தங்களின் உடல், அழகு, தோற்றம் … Read more