சமுர்த்தி பயனாளர்களா நீங்கள்! உங்களுக்கு ஓர் நற்செய்தி

சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அதிகரிப்பு நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மேலும் அவர் தெரிவிக்கையில்,   நாட்டில் 17 இலட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் சமுர்தி கொடுப்பனவை பெறுகின்றன. இவர்களுக்காக சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை 28 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 3,500 ரூபா மேலதிக கொடுப்பனவு பெற்ற குடும்பங்களுக்கான மேலதிக 4, … Read more

பல மணிநேர தொடர் மின் துண்டிப்புக்கு தயாராகுங்கள்! பொதுமக்களுக்கான அறிவிப்பு வெளியானது

நாட்டில் 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை  இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்காக எச்சரிக்கை காணப்படுவதாக மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   Source link

மீண்டும் அச்சுறுத்தவுள்ள அடுத்த வகை கோவிட் வைரஸ் குறித்து அச்சம் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்

நியூயோர்க்கில் எலிகள் உடலில் ஒரு வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வகை மரபணு மாற்ற கோவிட் வைரஸ் எலிகளிடமிருந்து பரவலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விலங்குகளிடம் கோவிட் காணப்படுவது கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும். காரணம், அது விலங்குகளிடம் பரவுவது கவனிக்கப்படாமலே விடப்பட்டு, பின்னர் புதிய ஒரு வகை கோவிட் வைரஸாக மனிதனுக்குப் பரவும் அபாயம் உள்ளது. ஆய்வாளர்கள் எலிகளின் அச்சத்தை ஆய்வுக்குட்படுத்திய போது, அவற்றில் கோவிட் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். சாக்கடையிலிருந்து … Read more

தென்னிலங்கையை கட்டுப்படுத்தும் மந்திரவாதி பெண்ணால் சர்ச்சையில் சிக்கிய இராணுவ உயர் அதிகாரி

தென்னிலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மந்திரவாதி பெண்ணொருவரை கொழும்புக்கு அழைத்து வந்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அநுராதபுரம் ஞானக்கா எனப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சோதிட ஆலோசனை சொல்லும் மந்திரவாதி பெண்ணை கொழும்பிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்ட ஞானக்கா பிரபல ஹோட்டல் ஒன்றில் உள்ள அழகுக்கலை நிலையத்திற்கு சென்றிருந்தார். 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமான அழகு கலை நிலையத்திற்கே அவர் … Read more

கொழும்பில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம் – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

புறக்கோட்டை மெனிங் சந்தையில் பச்சை வாழைப்பழங்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. மிகவும் ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை வாழைப்பழங்கள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மெனிங் சந்தையில் இடம்பெறும் இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரையிலும் அவதானம் செலுத்த வில்லை என தெரியவந்துள்ளது. முதலில் பச்சை நிறத்தில் காணப்படும் வாழைத்தார்களுக்கு மிகவும் ஆபத்தான இரசாயனத்தை தெளித்து அதனை தொங்க விடுவதாகவும் இரண்டு மணித்தியாலங்களில் வாழைக்காய் வாழைப்பழமாக மாறிவிடுவதாகவும் … Read more

இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு! – முக்கிய பிரமுகர் வெளியிட்ட தகவல்

”இலங்கை தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளை தீர்க்குமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை தமிழர் நலனுக்கு இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அங்கு தமிழர் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் அமைதி, சமத்துவம், நீதி, கண்ணியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என, பல கட்டங்களில் இலங்கை … Read more

உங்களுக்கு ஒமிக்ரோன் தொற்றா? இதை செய்தால் போதும்

ஒமிக்ரோன் திரிபு நாட்டில் மிக வேகமாக பரவி வருவதினால் ,இந்த நோய் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் சிகிச்சை பெறுவோர் நோய் நிலைமை மோசமடையாதிருக்க உரிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உடல் நல சிகிச்சை நிபுணர் (Physiotherapist ) சரத் காமினி டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் தவறான அறிவுரைகளால் நோய் நிலைமை மோசமடைகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு என்றும் சுட்டிக்காட்டினார். ஒமிக்ரோன் நோயின் சில அறிகுறிகள் … Read more

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர்! தொகை தெரியுமா? (வீடியோ)

இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், இலங்கையின் அனைத்துத் துறை வீரர் வனிந்து ஹசன்ரங்க 10.75 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டார் அவர்,இந்தியன் பிரீமியர் லீக்கில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடவுள்ளார். இன்றைய ஏலத்தின்போது பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தங்கள் அணியில் வனிந்து ஹசரங்காவை தேர்வு செய்ய ஆர்வம் காட்டின. இறுதியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஏற்கனவே வனிந்து ஹசரங்க கடந்த … Read more

இலங்கையில் வாகன இறக்குமதி! மத்திய வங்கி ஆளுநர் வெளிப்படுத்தியுள்ள விடயம்

நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கோவிட் தொற்று பரவலையடுத்து, பொருளாதார ரீதியில் இலங்கை பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது. உள்நாட்டிலுள்ள டொலர், ஆடம்பர தேவைகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை … Read more

யாழில் வீடொன்றை திடீரென சுற்றிவளைத்த பொலிஸார்: வசமாக சிக்கிய நபர்

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  32 வயதான குறித்த சந்தேகநபர் 100 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார் திடீரென மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் … Read more